அரசியலில் ஊழல் புரையோடி வருகிறது.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை!
சென்னை: அரசியலில் ஊழலும் முறைகேடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது வேதனை அளிப்பதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாலே ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் ஏற்கெனவே பதவியில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இதற்கான தீர்ப்பு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது அரசியலில் ஊழலும் முறைகேடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது வேதனை அளிப்பதாக தீபக் மிஸ்ரா வருத்தம் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பில் ஊழல் குறித்து இவர் அளித்த கருத்து 100 சதவீதம் உண்மை ஆகும். மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், வார்டு கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாரபட்சம் இல்லாமல் ஊழல் கொடி கட்டி பறக்கிறது.
[முதல்ல நீங்க நிறுத்துங்க.. அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கொட்டு!]

என்னென்ன ஊழல்
தமிழகத்தை எடுத்துக் கொண்டோமேயானால் முதல்வர் மீது சொத்து குவிப்பு வழக்கையும் அமைச்சர் மீது குட்கா ஊழல் வழக்கையும் திமுக முன்வைத்துள்ளது. இதுபோல் மாநிலத்துக்கு மாநிலம் மாட்டு தீவன ஊழல், சோலார் தகடுகள் வாங்கியதில் ஊழல், ரபேல் விமான ஊழல், அகஸ்டா வெஸ்ட்லாந்த் விமான கொள்முதல் ஊழல், சொத்துக் குவிப்பு வழக்கு, வஃக்பு வாரிய நில விவகாரத்தில் ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் நில ஒதுக்கீட்டில் ஊழல், காமன்வெல்த் கேம்ஸில் ஊழல், சத்யம் ஊழல் என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

குற்றச்சாட்டுகள்
இந்த ஊழலில் பெரும்பாலான மாநில அரசியல்வாதிகள் சிக்கியுள்ளனர். இதில் யாரும் விதிவிலக்கல்ல. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கூட சிவக்குமார் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மருந்தில்லாத புற்றுநோய் போல் ஊழலானது அங்கும் இங்கும் பரவித்தான் வருகிறது.

அரசியல்வாதிகள்
அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் முதல் உயர் அதிகாரி வரை தற்போது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி ஊழல் புகார் இருந்தால் சஸ்பெண்ட், வழக்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதை போல் அரசியல்வாதிகள் மீதும் எடுக்கப்பட வேண்டும். பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் காலம் கடந்து வழங்கப்படும் நீதிகளாலும் மற்றவர்களுக்கு பயம் என்பது இல்லாமல் போய்விடுகிறது.

வழக்குகள்
பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களே அரசியலில் இருக்கின்றன. ஒரு அரசியல்வாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டு, அதற்காக வழக்கு தொடுக்கப்பட்டு ஆதாரங்களை சமர்பித்து வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்குள் அந்த அரசியல்வாதியின் ஆயுளே முடிந்து விடுகிறது. எனவே இதபோன்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளின் மீதான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.

அரசு அதிகாரிகள்
இதற்கெல்லாம் தீர்வு என்றால் லோக் ஆயுக்த சட்டத்தை அனைத்து மாநிலங்களும் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கைகள் பாயும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications