இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்- சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகின்றனர்.

2013-ம் ஆண்டு இன்றோடு விடைபெறுகிறது. 2014 புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னையில் இன்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது சென்னை நகர வீதிகளில் இளைஞர்களின் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும்.

Directives to ensure incident-free new year celebrations

புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் நட்சத்திர ஓட்டல்கள், கிளப்புகள், உணவு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களை எவ்வாறு கொண்டாடவேண்டும் என்பது தொடர்பாக போலீசார் விதிமுறைகளை வகுத்துகொடுத்துள்ளனர். ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளனர்.

இன்று நள்ளிரவு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகின்றனர். 5 கூடுதல் கமிஷனர்கள், 7 இணை கமிஷனர்கள் மற்றும் 21 துணை கமிஷனர்கள் தலைமையில் சென்னை நகர் வீதிகள் முழுவதும் போலீசார் குவிக்கப்படுகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இரவு முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கும். வாகன சோதனைகளும் தீவிரமாக நடத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+