ஓர் தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல்... பாரதிராஜா வாழ்த்து!
Recommended Video

சென்னை : ஓர் தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல் என்று இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலின் அரசியல் பயணம் வெற்றி பெறவும் பாரதிராஜா கூறியுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா நடிகர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது : என் இனிய நண்பர் கமல்ஹாசனுக்க பாரதிராஜா எழுதுகிறேன், "அறிவாளியாய் இருப்பதைவிட புத்திசாலியாக இருக்கிறவன் தான் ஜெயிக்கிறான்" என்ற தத்துவம் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ்நாடு இன்று சாதி, மதம், இனம் வேற்றுமைகளால் உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. இது அத்தனையும் ஒரே அணியில் கூட்டிச் சேர்ப்பது பெரும்பாடு.
கரைவேட்டிக்ட்டி கட்சிக் கொடி பிடித்து, மேடை போட்டு, மைக் பிடித்து பேசுவது மட்டும் தான் மக்களுக்கான அரசியல் பிரச்சாரம் அல்ல! திரைப்படத்தின் மூலமும் சமூக அரசியல் பிரச்சாரம் அல்ல!திரைப்படத்தின் மூலமும் சமூக அரசியல் கருத்துகளைச் சொல்லலாம்.

மக்கள் பணியாற்றியவர்
என் திரைப்படங்கள சென்சார் செய்யாமல் திரையிட அனுமதிக்காததால் ஒரே ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியமைக்கிறேன் என்றாராம் அறிஞர் அண்ணா.
கமல்ஹாசனும் தன் திரைப்படங்களின் மூலம் சமூகக் கருத்துகளை மக்களிடம் விதைத்தவர்தான். தன் நற்பணி மன்றத்தின் மூலம் மக்கள் பணியாற்றியவர் தான். இந்த தானத்தில் இருந்து தன் உடலையே தானம் செய்தவர் கமல்.

தலைவனுக்கான தகுதியுடையவர்
அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்ற உள்நோக்கத்தோடு இது போன்ற நற்பணிகளை செய்தவரல்ல. உண்மையான தொண்டுள்ளம் கொண்ட காரணத்தினால் தான் செய்தார் ஓர் தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல்.

மாற்றம் கொண்டு வர முடியும்
இன்று அரசியல், தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, போராட்டம் ஆகியவற்றோடு பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. மக்கள் புரட்சியினால் மட்டும் தான் மாற்றம் கொண்டு வர முடியும்.

பயணம் வெற்றியடையட்டும்.
மக்கள் நீதி மய்யத்தின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் தான் போதிக்கிறான் என்று சொல்வார் பெர்னாட்ஷா. கமல்! நீங்கள் செய்ய முடிந்தவர். திரையில் தெரிந்த உங்களின் தசாவதாரம், அரசியல் விஸ்வரூபம் பெற வாழ்த்துகிறேன் என்று பாரதிராஜா வாழ்த்தியுள்ளார். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை கடுமையாக விமர்சித்த பாரதிராஜா கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications