ஆபீஸ் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி பெண் பலி - பஸ் டிரைவர் கைது
சென்னை: சென்னையில் பேருந்து சக்கரத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி பட்டதாரி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகத்தை அடுத்த ஒரத்தி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகள் பானுப்பிரியா. மாற்றுத் திறனாளியான இவர் செங்கல்பட்டு, மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை அவர் கம்பெனி பஸ்சில் இருந்து வேலைக்கு செல்ல இறங்கினார். பஸ்சின் முன் பக்கமாக பானுப்பிரியா சென்ற போது டிரைவர் கவனிக்கவில்லை. அவர் பஸ்சை கவனிக்காமல் இயக்கிய போது சக்கரத்தில் பானுப்பிரியா சிக்கிக் கொண்டார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பஸ் டிரைவர் பெருமாளை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications