தகுதிநீக்க நகலை முறையாக கொடுக்கவில்லை... 2 நாட்களுக்கு பிறகே கிடைத்தது.. தினகரன் தரப்பு வாதம்
சட்டமன்றம் என்ற குடும்பத்தை கட்டிக் காப்பவரே சபாநாயகர் என்று டிடிவி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
சென்னை: எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க நகல் பத்திரிகை, அரசிதழில் வெளியிடப்பட்ட இரு நாள்களுக்கு பிறகே எங்களின் கைக்கு கிடைத்தது என்று டிடிவி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த மாதம் 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில் 18 பேரின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் படி இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் 500 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சபாநாயகர் தரப்பு நீதிபதியிடம் தாக்கல் செய்தது.
இந்நிலையில் காலை முதலே அரசு தரப்பும், தினகரன் தரப்பும் சூடான விவாதங்கள் முன்வைத்தனர். அரசு சார்பில் முகுல் ரோத்தகியும், தினகரன் சார்பில் அபிஷேக் சிங்கிவியும் ஆஜராகினர்.
உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கிய இந்த வழக்கு விசாரணையில் அபிஷேக் சிங்வி வாதங்களை முன்வைத்த வைத்தார். அப்போது அவர் கூறுகையில், தகுதிநீக்க உத்தரவு நகல் பத்திரிகை, அரசிதழுக்கு அனுப்பப்பட்ட 2 நாள்களுக்கு பின்னரே எங்களுக்கு வழங்கப்பட்டது.
தகுதி நீக்க உத்தரவு நகல் எங்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டது. தகுதிநீக்க நகல் பத்திரிகை செய்தி, அரசிதழில் வெளியிட்டுள்ளனர். முதலில் எங்களுக்கு அனுப்பாதது மோசமான நடைமுறையாகும். சபாநாயகர் என்பவர் சட்டமன்றம் என்ற குடும்பத்தை கட்டிக் காப்பவராக செயல்பட வேண்டும் என்றார் அபிஷேக் சிங்வி. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரவிச்சந்திரபாபு வழக்கு விசாரணையை வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications