டாஸ்மாக் 'தீபாவளி' வசூல்: பிராந்தி ரூ.200 கோடி, பீர் ரூ.50 கோடி, ரம், விஸ்கி ரூ.70 கோடி!
சென்னை: தீபாவளியையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை ரூ.330 கோடிக்கும் மேல் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.80 கோடி கூடுதலாக மது விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஏராளமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சாதாரண நாட்கள் அன்று நாள் ஒன்றுக்கு ரூ.67 கோடிக்கு மது விற்பனை ஆகும். அதுவே வார இறுதி நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.90 கோடிக்கும் மேல் மது விற்பனையாகும்.
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆண்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச் செல்வார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சக்கை போடு போட்டுள்ளது.

ரூ.330 கோடி
தீபாவளியையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை ரூ.330 கோடிக்கும் மேல் மது விற்பனை நடந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் ரூ.43 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

தீபாவளி அன்று
தீபாவளி பண்டிகை அன்று மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.150 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

ரூ.80 கோடி அதிகம்
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ.250 கோடிக்கு மது விற்பனையானது. கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.80 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

பிராந்தி, பீர்
மது விற்பனையின் பிராந்தி வகைகள் விற்பனை மூலம் ரூ.200 கோடியும், பீர் மூலம் ரூ.50 கோடியும், ரம், விஸ்கி, வோட்கா ஆகிய மது வகைகள் மூலம் ரூ. 70 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications