Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காத்திருந்து காத்திருந்து".... வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம்.. விரக்தியில் தேமுதிகவினர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே நாளில் தரைமட்டமாகி விட்டது தேமுதிகவின் கிராக்கியும், மவுசும். என்றைக்கு, நாங்கள் தனித்துத்தான் போட்டியிடப் போகிறோம் என்று விஜயகாந்த் சொன்னாரோ அன்றே அவரை அப்படியே தூக்கிப் போட்டு விட்டன, அவரைக் கெஞ்சி வந்த கட்சிகள் அனைத்தும்.

தற்போது பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் அல்லது மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டும். இல்லாவிட்டால் தனித்து நின்று மீண்டும் டெபாசிட்டை இழக்க வேண்டும் என்ற நிலையில்தான் தேமுதிக உள்ளது.

எப்படியும் திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைப்பார், ஜெயித்து எம்.எல்.ஏவாகி விடலாம் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் விருப்ப மனு செய்திருந்த கட்சியினர் இப்போது பெரும் ஏமாற்றமடைந்துள்ளனராம். இதனால் விருப்ப மனு தாக்கல் செய்த போது கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு வருகிறார்களாம்.

மாறி மாறிக் குழப்பிய விஜயகாந்த் - பிரேமலதா

மாறி மாறிக் குழப்பிய விஜயகாந்த் - பிரேமலதா

விஜயகாந்த்தும், பிரேமலதா விஜயகாந்த்தும் சேர்ந்து கட்சிகளை மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் பெருமளவில் குழப்பி விட்டனர். இப்படிக் குழப்பிக் குளிர்காய்ந்து வந்த அவர்களின் நிலை இன்று பெரும் பரிதாபகரமாகியுள்ளது.

அதிமுகவில் கிடைத்த அங்கீகாரம்

அதிமுகவில் கிடைத்த அங்கீகாரம்

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாக்குகளை மட்டுமே பிரித்து வந்த தேமுதிகவுக்கு அதிமு கூட்டணியில் 2011ம் ஆண்டில் இடம் பெற்றதன் மூலம் அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அது தனது பலத்தால்தான் வந்தது என்று நினைத்துக் கொண்ட தேமுதிக கடந்த லோக்பசா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு போட்டியிட்ட 14 தொகுதிளிலும் படு தோல்வியைத் தழுவியது.

பாமக - பாஜக அளவுக்குக் கூட இல்லை

பாமக - பாஜக அளவுக்குக் கூட இல்லை

ஆனால் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜக, பாமக கூட தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தன. ஆனால் தேமுதிகவுக்கு செம அடி கிடைத்தது அந்தத் தேர்தலில்.

இருந்தாலும் போகாத கிராக்கி

இருந்தாலும் போகாத கிராக்கி

இருந்தாலும் தேமுதிகவின் கிராக்கி மட்டும் போகவில்லை. இந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை கடுமையாக முயன்றனர். பேரம் படு சூடாக நடந்து வந்தது.

கட்சியினர் உற்சாகம்

கட்சியினர் உற்சாகம்

இப்படி தங்களது கட்சிக்கு ஏற்பட்ட இந்த. கிராக்கியால் குஷியடைந்த தேமுதிகவினர் எப்படியும் வலுவான கூட்டணி அமையும், நாமும் எம்.எல்.ஏ ஆகி விடலாம் என்ற நம்பிக்கையில், விருப்ப மனுக்களைக் குவித்துத் தள்ளி விட்டனர்.

எல்லாம் போச்சு

எல்லாம் போச்சு

ஆனால் எவ்வளவு இறங்கி வந்தும் தேமுதிக இறங்க வராத காரணத்தால் திமுக, பாஜக உள்ளிட்டவை வெறுத்துப் போயிருந்த நிலையில் தேமுதிக தனியாகத்தான் போட்டியிடும் என்று கூறி அத்தனையையும் காலி செய்து விட்டார் விஜயகாந்த்.

வெறிச்சோடிப் போச்சு

வெறிச்சோடிப் போச்சு

விஜயகாந்த் சொன்னதால் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டபோதிலும், உடனடியாக சுதாரித்துக் கொண்டு அவரவர் வேலையைப் பார்க்கப் போய் விட்டனர்.

இன்னும் தொங்கும் பாஜக

இன்னும் தொங்கும் பாஜக

அதேசமயம், பாஜக மட்டும்தான் இன்னும் தேமுதிகவை தாங்கிக் கொண்டுள்ளது. தனித்து விடப்படும் நிலையில் அது இருப்பதால் துணைக்கு தேமுதிகவை கூப்பிட்டுக் கொண்டுள்ளது.

வந்தால் சரித்தான் - மக்கள் நலக் கூட்டணி

வந்தால் சரித்தான் - மக்கள் நலக் கூட்டணி

மறுபக்கம் மக்கள் நலக் கூட்டணி ரொம்பப் பக்குவமாக உள்ளது. எங்களது கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் நிச்சயம் வரவேற்போம் என்று அவர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.

டென்ஷனில் தொண்டர்கள்

டென்ஷனில் தொண்டர்கள்

ஆனால் தேமுதிகவினர்தான் செம டென்ஷனாக உள்ளனர். குறிப்பாக விருப்ப மனு தாக்கல் செய்தோர் இப்போது தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தையே விட்டு விட்டதாக சொல்கிறா்கள்.

பணத்தைக் கொடுங்க

பணத்தைக் கொடுங்க

விருப்ப மனு தாக்கலின்போது கொடுத்த பணத்தை பலர் திரும்பக் கேட்டு கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தவண்ணம் உள்ளனராம். அவர்களை கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த மாநில நிர்வாகிகள் சமாதானம் செய்ததுடன், தலைவர் நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார். அதுவரை பொறுமையாக இருங்கள். யாரும் கட்சி அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

குழப்பத்தில் தேமுதிக

குழப்பத்தில் தேமுதிக

தேமுதிக அலுவலகம் முன்பு போல இல்லை. கூட்டமே இல்லை. வெறிச்சோடிக் காணப்படுகிறது. தொண்டர்களிடம் சுரத்து போய் விட்டது. கட்சி் தலைமையும் வெளிப்படையாக இல்லை என்பதால் தேமுதிக முகாம் பெரும் குழப்பத்தில் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+