மதுக்கடைகளை மூடக்கோரி ஆகஸ்ட் 4ல் பந்த்: தேமுதிக, காங்கிரஸ் ஆதரவு- பாமக, தமாகா பங்கேற்காது
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க. மற்றும் த.மா.கா. பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முழுஅடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்ததையடுத்து, தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நாளை (ஆகஸ்ட்4) முழு அடைப்பு போராட்டத்திற்கு, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க., த.மா.கா. பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமக பங்கேற்காது
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 4ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்காது எனக் கூறினார்.

தமாகா ஆதரவில்லை
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், ''பூரண மதுவிலக்கு பற்றிய கொள்கை, உணர்வை த.மா.கா. மதிக்கின்றது. இருப்பினும், மக்கள், வர்த்தகர்கள் நலன் கருதி கடையடைப்பு போராட்டத்தில் த.மா.கா. பங்கேற்காது.'' எனக் கூறியுள்ளார்.

விஜயகாந்த் ஆதரவு
தமிழகத்தில் மதுவிலக்கு கோரி நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தேமுதிக ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தவும் வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆதரவு
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சசிபெருமாளின் மரணத்தை கொச்சைப்படுத்தும்விதமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமமாகும். இந்நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 4-ம் தேதி ( நாளை) நடக்கவுள்ள முழு அடைப்புக்கு தமிழக காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications