For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக வேட்பாளர் அறிவிப்பு: ராஜ்யசபா தேர்தலில் மீண்டும் பரபரப்பு! தேமுதிக நிலை என்ன?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போதுமான ஆதரவு இல்லாத நிலையிலும் வேட்பாளரை திமுக அதிரடியாக அறிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் பிப்ரவரி 7-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழக சட்டசபை பலத்தின் அடிப்படையில் 151 எம்.எல்.ஏக்கள், தேமுதிக, புதிய தமிழகம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 8பேரை கொண்ட அதிமுகவுக்கு 4 எம்.பிக்கள் கிடைப்பது உறுதி.

மேலும் இடதுசாரி எம்.எல்.ஏக்களும் இந்த அணியில் இணையும் நிலையில் 5வது எம்.பியும் அதிமுக அணிக்கே கிடைக்கும். இந்நிலையில் 6வது எம்.பி.யாவது யார் என்ற கேள்வி எழுந்தது.

திமுக வேட்பாளர்

திமுக வேட்பாளர்

இதனிடையே ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக திருச்சி சிவா நிறுத்தப்படுவார் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

திமுகவுக்கு 26 எம்.எல்.ஏக்கள்

திமுகவுக்கு 26 எம்.எல்.ஏக்கள்

ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.பிக்கள் ஆதரவு தேவை. ஆனால் சட்டசபையில் திமுகவுக்கு 23 எம்.எல்.ஏக்களும் மனித நேய மக்கள் கட்சியின் 2, புதிய தமிழகம் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ ஆதரவுமாக மொத்தம் 26 பேரின் ஆதரவுதான் உள்ளது.

தேமுதிக- காங்கிரஸ் 26 எம்.எல்.ஏக்கள்

தேமுதிக- காங்கிரஸ் 26 எம்.எல்.ஏக்கள்

மேலும் 21 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தேமுதிக , 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆகியவற்றுடன் திமுக எந்த ஒரு கூட்டணியிலும் இல்லை. தேமுதிக- காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்து அந்த அணி ஒரு வேட்பாளரை நிறுத்தினாலும் திமுகவைப் போல 26 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இந்த அணிக்கும் கிடைக்கும்.

6வது எம்.பி. இடத்துக்கு போட்டி? கூட்டணி பேரம்?

6வது எம்.பி. இடத்துக்கு போட்டி? கூட்டணி பேரம்?

தற்போதைய நிலையில் திமுக வேட்பாளரை அறிவித்திருப்பது என்பது 6வது எம்.பி இடத்துக்கான போட்டியை உறுதிப்படுத்தியிருக்கிறது. அத்துடன் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேரமாகவும் உருவெடுத்திருக்கிறது.

தேமுதிகவுக்கான வலை

தேமுதிகவுக்கான வலை

ஒரு ராஜ்யசபா எம்.பி. இடத்தை தேமுதிகவுக்கு திமுக விட்டுக் கொடுத்தாலோ அல்லது தேமுதிக வேட்பாளரையே நிறுத்தாமல் போனாலோ 6வது எம்.பி இடத்துக்கு போட்டி ஏற்படாமல் இருக்கும். இதனால் தேமுதிக நேரடியாகவோ அல்லது மறைமுகவோ திமுகவை ஆதரிக்கும் நிலை உருவாகும். ஆகையால் தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வரும் ஒரு முயற்சியாகவே 'ராஜ்யசபா' சீட் எனும் வலையை திமுக விரித்து வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

வலையில் விழுமா தேமுதிக?

வலையில் விழுமா தேமுதிக?

தேமுதிகவுக்கும் எளிதாக டெல்லி அரசியலில் நுழைய ஒரு வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் திமுகவின் இந்த வலையில் தேமுதிக நிச்சயம் சிக்கும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இன்னும் எத்தனை திருப்பங்கள் வருமோ?

English summary
The DMK on Friday announced the name of the party's propaganda secretary 'Trichy' Siva as its nominee for the Rajya Sabha election to six seats in Tamil Nadu scheduled on February 7. The situation throws up interesting possibilities. The DMDK might either refrain from fielding a candidate, indicating tacit support for the DMK, or seek the support of the Congress, hinting at possible ties with the national party for the Lok Sabha elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X