கருணாநிதி மறைவால் வாடுகிறேன்.. துக்கம் தாங்கலை.. எழுதி வைத்து விட்டு தொண்டர் தற்கொலை
கோவையில் திமுக தொண்டர் தற்கொலை செய்துகொண்டார்.
கோவை: கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதிவைத்து விட்டு தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திமுக தலைவரை நேசிப்பவர்கள் பலர். அதனால்தான் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நாளிலிருந்து தற்போது வரை ஏராளமானோர் உயிரை பலி கொடுத்துள்ளனர். கருணாநிதி குறித்த செய்திகளால், அதிர்ச்சி மரணம், மாரடைப்பு, தற்கொலை, என பலவிதங்களில் இந்த தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதுகூட கோவையில் ஒரு திமுக தொண்டர் உயிரிழந்துள்ளார். கணபதி பாரதி நகரை சேர்ந்த இந்ததொண்டர் பெயர் முத்துசாமி. 58 வயதான முத்துசாமி தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக இருந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற முத்துசாமி, இரவு வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை.
இதனால் குடும்பத்தினர் பல இடங்களில் முத்துசாமியை தேட ஆரம்பித்தனர். கடைசியில் பாரதி நகரிலேயே சாலை ஓரம் ஒன்றில் விழுந்து கிடப்பதாக சிலர் பார்த்துவிட்டு சொன்னார்கள். இதையடுத்து அங்கு உறவினர்கள் ஓடிச்சென்று பார்த்தால், முத்துசாமி விஷத்தை குடித்துவிட்டு விழுந்துள்ளது தெரியவந்தது. உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் சிகிச்சை அளித்தும் முத்துசாமி இறந்துவிட்டார்.
இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் விசாரணையை துவக்கினர். அப்போது அவரது சட்டையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், "தனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதி வைத்திருந்தார் முத்துசாமி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications