புதுவை திமுகவினர் ரத்த தானம்.... டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி! - வீடியோ
புதுவையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுகவினர் ரத்த தானம் அளித்தனர்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குகொடுப்பதற்காக திமுக இளைஞரணியைச் சார்ந்தவர்கள் ரத்த தானம் அளித்தனர்.
புதுச்சேரியிலும் தமிழகத்தைப் போல் டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவதால் தான் டெங்கு மரணம் அதிகம் ஏற்படுகிறது.

அதனால் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்படும் என கருதி புதுச்சேரி திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த பலர் ரத்த தானம் அளித்தனர். இதனை எம்.எல்.ஏ சிவா ஒருங்கிணைத்து நடத்தினார்.
மேலும், புதுச்சேரில் டெங்குவைக் கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் கசாயத்தை திமுகவினர் வழங்கினர். தமிழகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கிய தேமுதிகவினர் மீது வழக்குப் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications