கருணாநிதி நலம் பெற வேண்டும்.. காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் மொட்டை!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தி இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் மொட்டை!- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தி இருக்கிறார்கள்.

    கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது. நேற்று இரவு முழுக்க திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

    DMK cadres shaved their head for Karunanidhi good health

    4 நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது. நேற்று இரவு அவரது உடலில் பிரச்சனை ஏற்பட்டு பின் குணமானது. மருத்துவமனையில் தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

    இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டி இரண்டு நாட்களுக்கு முன்பே சில கோவிலில் பூஜை நடந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளவிற்கு தொண்டர்கள் ஆன்மீக வேண்டுதல்கள் செய்யவில்லை என்றாலும் பல இடங்களில் பூஜை நடந்து வருகிறது.

    அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்ற போதிலும், அவருக்கு பல இடங்களில் கடந்த மூன்று நாட்களில் வேண்டுதல்கள் நடந்து இருக்கிறது. இந்த நிலையில் இன்று திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தி இருக்கிறார்கள்.

    காவேரி மருத்துவமனை முன்பு மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தி வருகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி வரிசையாக சாலையில் உட்கார்ந்து மொட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+