'எதிர்க்கட்சித் தலைவர்' ஸ்டாலின் பிஏவை எம்.எல்.ஏ. ஹாஸ்டல் பொறுப்பாளராக நியமித்தற்கு திமுக எதிர்ப்பு
சென்னை : மு.க.ஸ்டாலினின் சிறப்பு நேர்முக உதவியாளராக ஆதிஷேசனை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு நேர்முக உதவியாளராக ஆதிசேஷன் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் போட்டி சட்டசபைக் கூட்டம் நடந்த போது ஆதிசேஷன் அங்கு நின்றதாக கூறி அவரை உதவியாளர் பதவியில் இருந்து அரசு நீக்கியது.
இந்த நிலையில் இன்று சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி, எ.வ.வேலு எம்.எல்.ஏ. ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து கடிதம் ஒன்று கொடுத்தனர். அதில், 'விதிகளை புறம்தள்ளி விட்டு ஆதிசேஷனை தகுதி இறக்கம் செய்துள்ளது தவறு. அவரை மு.க.ஸ்டாலினின் சிறப்பு நேர்முக உதவியாளராக மீண்டும் நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின்
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சருக்கு நிகரான சலுகைகள் உண்டு. அரசு தரப்பில் ஒரு நேர்முக உதவியாளர், உதவியாளர், கார், டிரைவர் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி ஸ்டாலினுக்கு நேர்முக உதவியாளராக சட்டசபை செயலகத்தில் துணைச் செயலாளராக பணிபுரிந்த ஆதிசேஷன் நியமிக்கப்பட்டிருந்தார்.

போட்டி சட்டசபை
கடந்த 17ம்தேதி சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு சென்ற மு.க.ஸ்டாலினை போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு நாட்கள் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நுழைவு வாயில் முன்பு தர்ணா மற்றும் போட்டி சட்டசபை கூட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ஆதிஷேசன் மாற்றம்
இந்த போராட்டத்தின் போது மு.க.ஸ்டாலினுடன் நேர்முக உதவியாளர் ஆதிசேஷன் நின்று கொண்டிருந்ததாக உளவுப்பிரிவு போலீசார் அரசுக்கு ரிப்போர்ட் அளித்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் பதவியில் இருந்து ஆதிசேஷன் நீக்கப்பட்டு எம்எல்ஏ ஹாஸ்டல் பொறுப்பாளராக மாற்றிவிட்டார்கள்.

எம்.எல்.ஏ ஹாஸ்டல் பொறுப்பாளர்
ஆர்டரை பார்த்த ஆதிசேசனுக்கு ரொம்பவே அதிர்ச்சி அந்த அதிர்ச்சியுடனே போய் எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்குப் போனாராம்.
அந்த நேரத்தில் நான் அங்கு இல்லை என்று எவ்வளவோ கூறியும் அதை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லையாம். சட்டசபையில் இந்த பிரச்சினையை எழுப்ப நினைத்தார் ஸ்டாலின்.

சபாநாயகருக்குக் கடிதம்
இன்று சட்டசபை தி.மு.க. கொறடா சக்கரபாணி, எ.வ.வேலு எம்.எல்.ஏ. ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து கடிதம் ஒன்று கொடுத்தனர். அதில், விதிகளை புறம்தள்ளி விட்டு ஆதிசேஷனை தகுதி இறக்கம் செய்துள்ளது தவறு. அவரை மு.க.ஸ்டாலினின் சிறப்பு நேர்முக உதவியாளராக மீண்டும் நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆதிசேசன் மீண்டும் ஸ்டாலின் பிஏவாக நியமனம் செய்யப்படுவாரா? அல்லது ஹாஸ்டல் பொறுப்பாளராகவே நீடிப்பாரா பார்க்கலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications