தமிழகம் முழுவதும் ஏப். 5-ஆம் தேதி முழு கடையடைப்பு- ஸ்டாலின்

காவிரி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 5-ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு அமைக்காததால் தமிழகம் போராட்ட களமாக மாறிவருகிறது. மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.

DMK convenes All Party meeting in Anna Arivalayam

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்துக்கு திமுக அழைப்பின் பேரில் வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை செயல்படாத மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டத்துக்கு அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பின்னர் அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

DMK convenes All Party meeting in Anna Arivalayam

அப்போது அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து வரும் 5-ஆம் தேதி அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அதேபோல் வரும் 15-ஆம் தேதி தமிழகத்துக்கு வரும் பிரதமர், மத்திய அமைச்சர்களுக்கு கருப்பு கொடி காட்டவுள்ளோம். காவிரிக்காக தமிழக உரிமை மீட்பு பயணம் நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+