For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கலகக் குரல்" எதிரொலி- மதுரை மாநகர் தி.மு.க. கூண்டோடு கலைப்பு! தற்காலிக பொறுப்புக் குழு அறிவிப்பு!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

DMK dissolves Madurai urban unit
சென்னை: திமுக தலைமையை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியதால் ஒட்டுமொத்த மதுரை மாநகர மாவட்ட தி.மு.க. அமைப்புக்கள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்டத்துக்கு தற்காலிக பொறுப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் "இனியொரு விதிசெய்வோம்' என்ற தலைப்பில் ஜனவரி 30-ந் தேதி திமுக பொதுக்குழு சென்னையில் நடைபெறும் என்று மதுரை திமுக நிர்வாகிகள் இருவர் ஒட்டிய போஸ்டர் அக்கட்சியில் பெரும் புயலை கிளப்பியது. இதைத் தொடர்ந்து திமுக மேலிடம் கடும் எச்சரிக்கை விடுத்தது.

ஆனாலும் கட்டுப்படாத மதுரை மாவட்ட திமுகவினர், மு.க. அழகிரியின் பிறந்த நாளையொட்டி பிரம்மாண்ட போஸ்டர்களையும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையிலும் மதுரை நகரம் எங்கும் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் திமுகவில் கலகக் குரல் வெடிக்கும் நிலை உருவானது.

இதைத் தொடர்ந்து இன்று திமுக பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கழக கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் செயல்பட்டதால், மதுரை மாவட்ட தி.மு.க. அமைப்புக்கள் கூண்டோடு கலைக்கப்பட்டு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. மதுரை மாநகர் மாவட்டக் கழகம் மற்றும் பகுதி, வட்டக் கழகங்கள் கலைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட கழகத்திற்கு முறைப்படி அமைப்புத் தேர்தல்கள் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிக பொறுப்புக்குழுவை நியமிக்கப்படுகிறது.

இதன்படி, மதுரை மாநகர் தி.மு.க. பொறுப்புக்குழுவின் தலைவராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் வி.வேலுச்சாமி, பெ.குழந்தைவேலு, எம்.ஜெயராம், பாக்யநாதன், மு.சேதுராமலிங்கம், சி.சின்னம்மாள் ஆகிய 6 பேரை பொறுப்புக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கே செல்லுமோ இந்தப் பாதை?

English summary
DMK, the party general secretary, K. Anbazhagan, today dissolved the Madurai Urban district committee and the newly formed advisory committee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X