திருமுருகன் காந்தி, வளர்மதி மீதான குண்டர் சட்டத்திற்கு எதிர்ப்பு...திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நீட் தேர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கதிராமங்கலம், நெடுவாசல் விவசாயிகள் போராட்டம், தமிழக மாணவர்களை பாதித்துள்ள நீட் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

DMK district secretaies meeting started

மேலும் மாணவர்களின் மருத்துவ கனவிற்கு உலைவைக்கும் நீட் தேர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 27ல் மனித சங்கிலி நடைபெற உள்ளது.

குண்டர் சட்டத்தில் இருந்து திருமுருகன் காந்தி, வளர்மதியை விடுவிக்க வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பவளவிழா கொண்டாட்டம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதிகளில் முரசொலி பவளவிழா கொண்டாட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக யார் யாரை அழைப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK district secretaries meeting headed by working president Stalin started to discuss about Neet issue and Murasoli Maran paltinum jubilee celebration
Please Wait while comments are loading...