65 திமுக மாவட்டங்கள்.. வரப்போவது புதியவர்களா? குறுநில மன்னர்களின் பிரதிநிதிகளா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தொண்டர்கள் எதிர்பார்த்த மாற்றம் அறிவிக்கப்பட்டுவிட்டது. குறுநில மன்னர்களாக கோலோச்சிக் கொண்டிருந்த மாவட்ட செயலர்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி திமுக 65 மாவட்டங்களாக்கப்பட்டுவிட்டது. இந்த புதிய மாவட்ட செயலாளர்கள் யாராக இருப்பார்கள் என்பதுதான் திமுகவினர் எதிர்பார்ப்பு.

லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவை சீரமைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 65 மாவட்டங்களாக திமுக பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்தின் கீழ் அடங்கும் சட்டசபை தொகுதிகளும் நேற்றே அறிவிக்கப்பட்டுவிட்டது. விரைவில் இதர கிளைகளும் எந்தெந்த மாவட்டத்தின் கீழ் வரும் அறிவிக்கப்பட்டு கட்சித் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

யார் புதிய மா.செ?

யார் புதிய மா.செ?

தற்போது இந்த புதிய மாவட்டங்களின் செயலாளர்களாக இருக்கப் போவது புதியவர்களா? அல்லது ஏற்கெனவே இருக்கும் மாவட்ட செயலாளர்களின் ஆதரவாளர்களா? என்ற எதிர்பார்ப்புதான் திமுக தொண்டர்களிடம் இருக்கிறது.

பொன்முடி

பொன்முடி

விழுப்புரம் மாவட்டம் இப்போது 3ஆக பிரிக்கப்பட்டுவிட்டது. இதனால் பொன்முடியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் எஞ்சிய 2 மாவட்டங்களுக்கும் பொன்முடியின் ஆதரவாளர்களைப் போடக் கூடாது என்ற குரல் இப்போதே எழுகிறது.

காந்தி

காந்தி

அதேபோல் வேலூர் மாவட்டமும் 3 ஆக பிரிக்கப்படுகிறது. இதனால் அங்கு காந்தியின் பிடியில் இருந்து திமுக விடுவிக்கப்பட்டுவிட்டது.

நேரு

நேரு

திருச்சியில் கேள்வி கேட்க முடியாத திமுக தலைவராக இருப்பவர் கே.என். நேரு. இப்போது அவருக்கும் செக் வைத்து திருச்சி 2ஆகப் பிரிக்கப்பட்டுவிட்டது. இதில் அதிருப்தி கோஷ்டியான செல்வராஜ் தரப்புதான் ஏக எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

சேலம்

சேலம்

மற்றொரு சர்ச்சைக்குரிய மாவட்டம் சேலம். வீரபாண்டியார்தான் திமுக.. அவர் கை காட்டும் நபருக்குத்தான் திமுகவில் பதவி எல்லாம் என்ற நிலை இருந்தது. வீரபாண்டியார் மறைந்த நிலையில் அவரது குடும்பம் 'குடைச்சல்' கொடுத்து வந்தது. தற்போது 3 மாவட்டங்களாக சேலம் பிரிக்கப்பட்டிருக்கிறது.

நெல்லை

நெல்லை

பஞ்சாயத்து தீராத திமுக மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி. இங்கே 'ஆ'னா ஆவுடையப்பனும் 'க'னா கருப்பசாமி பாண்டியனும் மல்லுக்கட்டி மல்லுக்கட்டி திமுகவினரை சோர்வடைய வைத்துவிட்டனர். இப்போது 2 மாவட்டங்களாக திருநெல்வேலி பிரிக்கப்பட இருதரப்பும் ஆவலுடன் காத்திருக்கிறது.

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகரில் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நபராக கோலோச்சுபவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். இந்த மாவட்டமும் கூட இரண்டாக பிரிக்கப்பட்டுவிட்டது.

கோவை

கோவை

இதேபோல் கோயம்புத்தூர் 4 ஆக பிரிக்கப்பட்டுவிட்டது. இங்கு முன்பு 2 மாவட்டமாக பிரிக்கப்பட்டது பொங்கலூர் பழனிச்சாமி தமது மனைவிக்கும் மாவட்ட செயலர் பதவியை வாங்கிக் கொடுத்தார். அந்த கொடுமை இப்போது நிகழ்ந்துவிடக் கூடாது என்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் கோவை திமுகவினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கல்லைப் பொறுத்தவரையில் ஐ.பெரியசாமிதான் இங்கு எல்லாமே. ஒட்டன்சத்திரம் சக்கரபாணி, செல்வாக்கு பெற்றவராக இருந்தாலும் ஐ.பி.க்கு அடுத்ததாகத்தான் இருந்தார். இப்போது திமுக 2 ஆக பிரிக்கப்பட சக்கரபாணி கோஷ்டி எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

எப்படியோ திமுகவுக்கு புதுமுகங்களைப் போட்டு புதுரத்தம் பாய்ச்சினால்தான் வண்டி கரைசேரும் என்பதை அக்கட்சி மேலிடம் உணர்ந்தாக வேண்டும் என்பதே தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+