தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார்
சென்னை: தமிழகம் முழுவதும் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மின்வாரிய அதிகாரிகளே காரணம் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் குற்றம்சாட்டினார். அத்துடன் அமைச்சர் ரஞ்சித்குமார் மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அமைச்சர் அதிகாரியிடம் உரையாடலை மைக் மூலம் பொதுமக்களுக்கு காட்டினார். நன்றி தெரிவிக்கச் சென்ற இடத்தில் பொதுமக்கள் மின்சாரம் கட் ஆவதாக புகார் அளித்ததால், அவர்களிடம் திமுகவை அமைச்சர் குற்றம்சாட்டினார்.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.வீ. இரஞ்சித்குமார் அவர்கள், தற்போது தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிட்டு பொதுமக்கள் அமோகமாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித் குமார் காஞ்சிபுரம் அருகே உள்ள குண்டுகுளம், விப்பேடு, நரப்பாக்கம், மேல்கதிர்பூர், கீழ்க்கதீர்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நரப்பாக்கம் பகுதியில் நன்றி தெரிவிக்க வந்த அமைச்சர் ஆர்.வீ. இரஞ்சித்குமாரிடம், அப்பகுதி மக்கள் தங்களது பகுதியில் செல்லும் இடம் எல்லாம் பொதுமக்கள் கூட்டமாக நின்று தங்கள் கோரிக்கையை மனுவாக அளித்து நிறைவேற்று தரும்படி அமைச்சரிடம் கூறினர். கிராமப் பகுதியில் முழுவதும் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர் ரஞ்சித் குமார் மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதுடன், அதிகாரியிடம் பேசிய உரையாடலை மைக் மூலம் பொதுமக்களுக்கு காட்டியபடி பேசினார். அத்துடன் மின்சாரம் அடிக்கடி போவதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்வாரிய அதிகாரியிடம் வலியுறுத்தினார். அப்போது மின்வாரிய அதிகாரி , தனக்குக் கீழ் பணிபுரியும் செயற்பொறியாளர் சரிவர பணியாற்றவில்லை என்றும், அவர் மீது ஏற்கனவே பல புகார்கள் வந்துள்ளதால் விளக்கக் கடிதம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்புப் பொறியாளர் அமைச்சரிடம் தெரிவித்தார்.
பொதுமக்களிடம் தமிழக முழுவதும் மின்சாரம் ஆங்காங்கே துண்டிக்கப்படுவது காரணம் திமுக கட்சியை சேர்ந்த அதிகாரிகள் என்பதால் வேண்டுமென்றே மின்சாரம் துண்டிப்பு செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய அமைச்சர், அப்படி செயல்படுபவர்களை கன்னியாகுமரிக்கு பணியிட மாற்றம் செய்து விடுவேன் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications