விவசாய, வணிகர் சங்கங்களின் செப்.16 முழு அடைப்பில் திமுக பங்கேற்கும்... கருணாநிதி
சென்னை: கர்நாடக வன்முறைகளைக் கண்டித்து வரும் 16-ந் தேதி விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் இணைந்து நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தில் திமுகவும் பங்கேற்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்திட தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர்களின் சம்மேளனம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமை யாளர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இந்த முழு கடை அடைப்புப் போராட்டத்திற்கு தி.மு. கழகத்தின் ஆதரவினை அந்த அமைப்புகளின் சார்பில் கோரப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையினை ஏற்று வரும் 16ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள முழு கடையடைப்புப் போராட்டத் திற்கு ஆதரவு தருவதென திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்திருக்கிறது.
எனவே தி.மு. கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் இந்தப் போராட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவினைத் தந்து, போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications