கருப்பசாமி பாண்டியன் விவகாரம் - கோஷ்டி மோதல் எதிரொலியா?

தமிழரசி என்ற பெண் கருப்பசாமி பாண்டியன் மீது கொடுத்துள்ள பாலியல் வற்புறுத்தல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக வட்டாரத்தையும் கலவரப்படுத்தியுள்ளது.
அதை விட முக்கியமாக புகார் கூறிய பெண்ணின் தாத்தா, நெல்லை பகுதியில் திமுகவை வளர்த்த முன்னோடிகளில் ஒருவர். எனவே திமுகவினர் மத்தியில் இந்த புகார் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இதுவரை கருப்பசாமி பாண்டியன் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. யாரும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் அவர் உள்ளார். அவரது செல்போனும் செயல்படவில்லை. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கருப்பசாமி பாண்டியன் தரப்பில் இது கோஷ்டிப் பூசலின் விளைவாக ஏற்பட்டுள்ள சர்ச்சை என்கிறார்கள். கருப்பசாமி பாண்டியனுக்கு பிடிக்காத எதிர்க்கோஷ்டியினர் செய்த சதியே இது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கருப்பசாமி பாண்டியன் தற்போது சென்னை விரைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர் திமுக தலைவர் கருணாநிதியையும், பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications