அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வாங்க.. ராமதாசிடம் திமுக நிர்வாகி நேரில் அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 16ம் தேதி திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க பாமகவுக்கு திமுக அழைப்புவிடுத்துள்ளது.

தமிழக விவசாயிகளின் பிரச்சனை குறித்து விவாதிக்க வரும் 16-ம் தேதி திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டவுள்ளதாக கட்சியின் செயல் தலைவர் ஸடடாலின் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த அவர், காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் தொலைத்துவிட்டனர்.

ஸ்டாலின் அறிக்கை

ஸ்டாலின் அறிக்கை

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் அவர்கள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு ஒரு நியாயம் கிடைக்க வழிவகை செய்யக்கோரி தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் அரை நிர்வாண போராட்டத்தில் துவக்கி, முழு நிர்வாணப் போராட்டமும் நடத்தி தங்களின் பரிதாப நிலையை நாட்டிற்கும் பறைசாற்றிவிட்டனர். இவ்வளவிற்கு பிறகும் விவசாயிகளை சந்தித்துப் பேசி, அதனை தீர்த்து வைக்கும் மனநிலையில் பிரதமர் மோடியும், முதலமைச்சர் எடப்பாடியும் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.

அறிவித்தேன்

அறிவித்தேன்

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி டெல்லிக்கு சென்று ஜந்தர் மந்தரில் போராடும் விவசாயிகளை தாம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய போது பத்திரிகையாளர்களிடம் பேசினேன். அப்போது பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் விவசாயிகளின் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் தி.மு.க.வின் சார்பில் கூட்டப்படும் என்றேன்.

திமுக அழைப்பு

திமுக அழைப்பு

இதன்படி தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து அவர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்து வரும் 16ம் தேதி காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த கூட்டத்திற்கான அழைப்பு ஒவ்வொரு கட்சித் தலைவர்களுக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

நேரில் அழைப்பு

நேரில் அழைப்பு

இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க பாமகவுக்கு, திமுக நேரில் அழைப்புவிடுத்துள்ளது. தைலாபுரத்தில், பாமக நிறுவன தலைவர் ராமதாஸை, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இன்று நேரில் சந்தித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்துள்ளார். பாமகவின் முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க இ.கம்யூனிஸ்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK invites PMK to participate in the All party meeting which will be held in April 16th.
Please Wait while comments are loading...