முஸ்தபா முஸ்தபா.. திமுக மூழ்கி வரும் கப்பலப்பா.. பொன். ராதா கிண்டல்!
தமிழர்களை ஏமாற்றுவதற்காக திமுக பயன்படுத்திய வார்த்தைதான் மாநில சுயாட்சி. திமுக தண்ணீரில் மூழ்கி வரும் கப்பல் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்தார்.
சென்னை: தமிழர்களை ஏமாற்றுவதற்காக திமுக பயன்படுத்திய வார்த்தைதான் மாநில சுயாட்சி ஆகும். திமுக என்பது தண்ணீரில் மூழ்கி வரும் கப்பல் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்தார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தமிழே படிக்காமல் பிஎச்டி வரை படிக்கும் நிலை உள்ளது. இடஒதுக்கீடு கோரி மருத்துவ மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நல்லதல்ல. நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுவது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த மாட்டோம் என்று கூறுவது போன்றுள்ளது.

தமிழர்களை முட்டாள்களாக்குவதற்கு திமுக பயன்படுத்திய வார்த்தைத்தான் மாநில சுயாட்சி. இதற்காக திமுக என்ன செய்தது. திமுக தண்ணீரில் மூழ்கி வரும் கப்பல். அதை காப்பாற்றுவதற்காக அவர்கள் முயற்சிக்கின்றனர். பாஜகவின் அசுர வளர்ச்சியை பார்க்க பொறுக்காமல் திமுகவும், அதிமுகவும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
தமிழை வளர்க்க திராவிடக் கட்சிகள் என்ன செய்துள்ளன. திருக்குறளை அகில இந்திய அளவில் பாடமாக கொண்டு வருவதற்கான அத்துனை முயற்சிகளையும் பாஜக செய்து வருகிறது.
மாணவர்களின் தரத்தை உயர்த்தவே நீட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. தமிழக அரசின் கல்விக் கொள்கையை தான் மாணவர்கள் எதிர்க்க வேண்டும், நீட் தேர்வை அல்ல. தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதினால் திறமையாக வர முடியும். விவசாயிகள் பிரச்சினையை மாநில அரசு தான் தீர்க்க வேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications