மதுரையில் நவ.3,4-ல் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் நேர்காணல்

திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனங்களுக்கான நேர்காணல் மதுரையில் நவம்பர் 3,4 இரு நாட்கள் நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனங்களுக்கான நேர்காணல் மதுரையில் நவம்பர் 3,4 இரு நாட்கள் நடைபெறுகிறது.

திமுகவில் அண்மையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கப்பட்டது. இதன் மாநிலச் செயலாளராக பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.

DMK IT wing coordinators interview to held on Nov 3 at Madurai

இதையடுத்து திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கு தகுதியாக ப்ளஸ் டூ படித்திருக்க வேண்டும், கம்ப்யூட்டரில் எம்.எஸ்.வேர்டு, எக்செல் பயின்றிருக்க வேண்டும்; ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் முழு பரிச்சயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனங்களுக்கான நேர்காணல் தொடங்குகிறது. நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மதுரை திமுக மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.

திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.வுடன் மாவட்ட செயலாளர்கள் இந்த நேர்காணலில் உடன் இருப்பர். மதுரையைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நேர்காணல்கள் நடத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+