நல்ல உடல்நிலையில் கருணாநிதி.. இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார்.. துரைமுருகன் நம்பிக்கை
திமுக தலைவர் கருணாநிதி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று திமுக மூத்த தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று திமுக மூத்த தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறார். முன்பு இருந்ததை விட அவரது உடல்நிலை மிகவும் நல்ல நிலையை அடைந்துள்ளது.

அவருக்கு 9வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார். அதேபோல் அவரது ரத்த அழுத்தமும், சிறுநீராக நோய் தொற்றும் குணமாகி உள்ளது. இந்த நிலையில் அவரது உடல்நிலை பற்றி திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பேட்டியளித்தார்.
அதில், திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தேறி வருகிறது. சென்ற வாரம் இருந்ததை விட அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவருக்கு நாங்கள் பேசுவது கேட்கிறது.
அவர் சுயநினைவுடன் இருக்கிறார். இரண்டு முறை எழுந்து உட்கார்ந்தார். அவர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார், என்று துரைமுருகன் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி திமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications