மின்னொளியில் ஜொலிக்கும் மருதமலை.. கந்த சஷ்டி விரதம் தொடங்கியதால் கோலாகலம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விரதம் தொடங்கியது. இதையொட்டி, திரளான பக்தர்கள் விரதத்தைத் தொடங்கி முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு என பக்தர்களால் போற்றப்படும் மருதமலை திருக்கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விரதம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டனர். பலர் ஆறு நாட்கள் விரதம் மேற்கொண்டு சஷ்டி விழாவில் பங்கேற்கத் தயாராகி வருகின்றனர்.

Marudhamalai Kandha Sashti Murugan Temple

கந்த சஷ்டி விழா கோலாகலம்

கந்த சஷ்டி விழாவையொட்டி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மருதமலை

மேலும், விழாவையொட்டி மருதமலை திருக்கோவிலின் ராஜகோபுரம், படிக்கட்டுகள், கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ஒளிரும் மின்விளக்குகளால் மலைக்கோவில் முழுவதும் கண்கவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

மலை உச்சியில் அமைந்துள்ள திருக்கோவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் காட்சிகள் பக்தர்களையும், பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன. இதனால், மருதமலை திருக்கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற உள்ள சூரசம்ஹாரத்தைக் காணவும், முருகப்பெருமானின் அருளைப் பெறவும் அடுத்தடுத்த நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+