நீண்ட நாள் காதலனுடன் எளிமையாக திருமணம் செய்த பிரியா பவானி சங்கர்.. அனிருத் போல இல்லையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை பிரியா பவானி சங்கரின் திருமண வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவருடைய நீண்ட நாள் காதலரான ராஜ் வேலுடன் பிரியா மணகோலத்தில் இருக்கிறார். அவருடைய கழுத்தில் ராஜ் தாலி கட்டும் போது பிரியா சந்தோஷமாக தலையை ஆட்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது திருமணத்தைப் பற்றி சோஷியல் மீடியாவில் எதுவும் அறிவிக்காமல் எளிமையாக நடந்து முடிந்திருக்கும் பிரியா பவானி சங்கருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

திருமண வீடியோ

அந்த வீடியோவில் சிவப்பு நிற புடவையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் பிரியா சங்கருக்கு அருகில், வெள்ளை உடையில் ராஜ் வேல் அமர்ந்திருக்கிறார். இருவரும் மாலை அணிந்து திருமண சடங்குகளை செய்கின்றனர். ஏற்கனவே நேற்று பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ராஜ்வேலுடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அதில் கழுத்தில் மல்லிகைப்பூ மாலை அணிந்திருந்தார்கள். அதுபோல இன்னொரு போட்டோவில் ப்ரியா கைகளில் மருதாணி வைத்து, அதையும் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு கல்யாணமா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அது குறித்து அவர் எந்த பதிலையும் சொல்லவில்லை.

Priya Bhavani Shankar Rajvel Raj Tamil Cinema Wedding

அனிருத் போல இல்ல

ஆனால் இன்று அவருடைய திருமண வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. ஏற்கனவே இன்று இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவியா மாறன் திருமணம் கிரீஸில் நடைபெற இருப்பதால் அது குறித்த புகைப்படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு பிரியா பவானி சங்கரின் திருமண வீடியோஸ் சர்ப்ரைஸ் தான். அதுபோல இன்னும் அதிகமான ரசிகர்கள் பிரியா பவானி சங்கர் அனிருத் போல இல்ல, தனது திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தாலும் போட்டோஸ்களை இப்போ வெளியிட்டு விட்டாரே என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் அடி எடுத்து வைத்து சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர் காலேஜ் படிக்கும்போது இருந்தே தனது காதலரே காதலித்து வந்த நிலையில், சில வருடங்களாக தனது காதலருடன் லிவ்விங்கில் வாழ்ந்து வருகிறார். இருவரும் போன வருடமே புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து இருந்தனர் அப்போது கூட திருமணம் எப்போது என்று கேட்டதற்கு சீக்கிரமாக நடக்கும் என்று சொல்லி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+