எடப்பாடி கூட்டத்தின்போது சென்ற திமுக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு.. அதிமுகவினர் அட்டகாசம்!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: அண்மையில் திருச்சி அருகே, எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நேற்று இரவு காரியாபட்டியில், திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை அதிமுகவை உடைத்து நொறுக்கியுள்ளனர்.

சமீபத்தில் திருச்சி துறையூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, சாலையில் அதிமுக தொண்டர்கள் கூடியிருந்த நிலையில், அந்த வழியாக கூட்டத்திற்கு நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று நுழைந்தது. அதனை தடுத்து நிறுத்திய அதிமுகவினர், ஆம்புலன்ஸின் பின்பக்க கதவை திறந்து பார்த்து உள்ளே நோயாளி இல்லாததால் ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர்.அதிமுகவினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

DMK Leader s Car Attacked By AIADMK cadres in Kariyapatti After EPS Campaign Ambulance Incident

காயமடைந்த ஓட்டுநர் செந்தில்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிமுக கூட்டத்திற்குள் ஒருவர் மயங்கி விழுந்ததாக அழைப்பு வந்ததால் அங்கே சென்றதாக அவர் தெரிவித்தார். தன்னை மட்டுமல்லாது, 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் ஆம்புலன்ஸ் உதவியாளரையும் அதிமுகவினர் தாக்கியதாக ஓட்டுநர் செந்தில்குமார் குற்றம்சாட்டினா. ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதற்கு முன்னதாக ராணிப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்பரையின்போது ஆம்புலன்ஸ் வாகனம் சென்றபோது எடப்பாடி பழனிசாமி கோபமடைந்து, இனி நான் பிரச்சாரம் செய்யும்போது ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸை ஓட்டி வருபவர் அதே ஆம்புலன்ஸில் நோயாளியாக போவார் என மிரட்டல் விடுத்த நிலையில் அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை சூழ்ந்து கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இநிலையில், 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது, திருச்சுழி தொகுதி வளம் பெற அதிமுக ஆட்சியில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

எடப்பாடி பழனிசாமி பரப்புரையின்போது கூட்டத்தின் நடுவே சென்ற திமுக நிர்வாகியின் கார் ஒன்று வந்தது. அப்போது அதிமுகவினர் ஆத்திரமடைந்து அந்த காரின் கண்ணாடியை அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக சேர்மனின் சகோதரர் ஒட்டி வந்த காரை சுற்றி வளைத்து கண்ணாடியை உடைத்து விரட்டி அடித்துள்ளனர்.

அண்மையில் திருச்சி அருகே, எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நேற்று இரவு காரியாபட்டியில், திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை அதிமுகவை உடைத்து நொறுக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+