மோடியின் கொ.பா.சேவாக 'மாறிய' குஷ்பு
சென்னை: மோடி பிரதமராக பதவியேற்க தயாராகும் நேரத்தில் கிட்டத்தட்ட அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் போல மாறிவிட்டார் திமுக பிரச்சார பீரங்கியான நடிகை குஷ்பு.

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக கூட்டணி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நிலவியது. திமுகவின் பிரச்சார பீரங்கியான நடிகை குஷ்பு, பாஜகவையும், மோடியையும் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், இப்போது குஷ்புவின் மோடி மீதான நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன.
நரேந்திரமோடியின் டுவிட்டர்களை ரீடுவிட் செய்வதிலேயே குஷ்பு இன்று பெரும்பொழுதை கழித்தார் என்றால் அது மிகை கிடையாது. "நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண்கள் பங்களிப்பு அவசியம். வீட்டை கவனிப்பது மட்டுமே பெண்களின் வேலை என்ற நிலை இப்போது மாறிவிட்டது. நாட்டை உருவாக்குபவர்களாக பெண்களை நாம் பார்க்க வேண்டும்" என்பது ஜனவரி 19ம்தேதி மோடி செய்த டுவிட். அதை தேடிபிடித்து இன்று குஷ்பு ரீடுவிட் செய்துள்ளார் என்றால் அவரது கடமை உணர்வு அபாரம் என பாராட்டத்தான் வேண்டும்.
இதேபோல ரயில் விபத்து குறித்த மோடியின் இன்றைய டுவிட்டையும், குஷ்பு தனது பாலோவர்களுக்காக ரீடுவிட் செய்துள்ளார். மோடியை மட்டுமல்ல சுஷ்மாவுக்கும் கொ.பா.சே குஷ்புதான் போலும். சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் அக்கவுண்ட் பெயர் மாறியுள்ளது என்று டுவிட் செய்ததையும் குஷ்பு ரீடுவிட் செய்து நல்ல பிள்ளையாக நடந்துகொண்டுள்ளார். திமுகவும் மோடிக்கு எதிரான விமர்சனங்களில் காட்டத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications