கேடு கெட்ட அரசியல்வாதிகளும் அவர்கள் குவிக்கும் கோடிகளும்...திமுகவின் கவிஞர் சல்மா சொல்வது யாரை?
சென்னை: திமுகவை சேர்ந்த கவிஞர் சல்மா, தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் "கேடு கெட்ட அரசியல் வாதிகளும் அவர்கள் குவிக்கும் கோடிகளும்..." என மிகக் கடுமையாக சாடியுள்ளார். சல்மா யாரை மனதில் வைத்து இப்படி சாடினார் என்பது பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.
கவிஞர் சல்மா தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
சில மாதங்களுக்கு முன் நண்பனின் உணவகத்தில் இரவு உணவுக்கு சென்றிருந்தேன். பத்து மணிக்கும் மேல் ஆகி விட்டபடியால் கஸ்டமர் யாரும் இல்லை. உணவகத்தை ஒரு இளைஞன் தரையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தான்.

அவனது தோற்றம் ஒரு விளையாட்டு வீரனுக்கு உரியதாக தெரிய நண்பனிடம் கேட்டேன்
ஆமாம் இவன் ஆணழகன் போட்டியில் பல பரிசுகளை மாவட்ட அளவில் வென்றிருக்கிறான். இன்னும் பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுதான் இருக்கிறான்...
வறுமை... சரியான உணவு இல்லாமல் இங்கே பணி புரிகிறான். இரவு முழுக்க இங்கே வேலை செய்வான்... நல்ல உணவு அவனது பயிற்சிக்கு தேவை அல்லவா....
காலை ஒரு ஜிம்மில் வேலை. கடுமையான உழைப்பாளி. அவனது கனவு இந்திய அளவில் ஆணழகன் பட்டம் வெல்வதுதான்.
தணிவான குரலில் எனது நண்பன் கூறிய செய்தி என் இதயத்தை உருக வைக்க்கூடியதாக இருந்தது. அவனது முகம் சற்று கூச்சத்துடன் இருக்க என்னை பார்ப்பதை தவிர்த்தபடி தரையை துடைத்துக்கொண்டிருந்தவனை நானும் கவனிக்காதவளாக நடித்து விட்டு அங்கிருந்து வெளியேறினேன்.
கேடு கெட்ட அரசியல் வாதிகளும் அவர்கள் குவிக்கும் கோடிகளும் -:(
இன்று நமக்குக்கிடைத்திருக்கும் பதக்கங்குக்கு உரிமை கொண்டாட அந்த பெண்களும் அவர்களது குடும்பங்களுக்கும் தான் உரிமை இருக்கிறதே தவிர
இந்த நாட்டு பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கல்ல...
இவ்வாறு சல்மா பதிவிட்டுள்ளார்.
சல்மாவின் பதிவு உயர்வான நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. சர்ச்சையும் இல்லை.
இந்த பதிவில் " கேடு கெட்ட அரசியல் வாதிகளும் அவர்கள் குவிக்கும் கோடிகளும் -:( " என எதற்காக சல்மா பதிவிட்டுள்ளார்? அவர் யாரை மனதில் வைத்து இப்படி பதிவிட்டிருக்கிறார்? என்பது அவரது கருத்து பதிவு பக்கத்திலேயே பெரும் விவாதமாகி இருக்கிறது.
-
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா












Click it and Unblock the Notifications