முரசொலி பவள விழா: திமுக தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி உதயம்?
சென்னை: திமுக தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி ஒன்று உதயமாக இருக்கிறது என்பதை சென்னையில் நடைபெற்ற முரசொலி பவள விழா சுட்டிக்காட்டியுள்ளது.
Recommended Video

சென்னை கொட்டிவாக்கத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பவளவிழா இன்று நடைபெற்றது. இந்த பவளவிழாவில் தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே மேடையில் திரண்டிருந்தன.

20-க்கும் மேற்பட்ட தலைவர்கள்
காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பார்வார்டு பிளாக் என 20-க்கும் மேற்பட்ட கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் இந்த மேடையில் அமர்ந்திருந்தனர். ஏற்கனவே கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில் பாஜகவுக்கு எதிரான தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக திரண்டிருந்தனர்.

அனைத்து தலைவர்கள்...
தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றியிருக்கிறது முரசொலி பவளவிழா. தற்போதைய தமிழக அரசியலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக தவிர அனைத்து கட்சிகளும் திமுகவுடன் கைகோர்த்தி நிற்கின்றன.

முகமலர்ச்சியுடன் வைகோ
கடந்த சில தேர்தல்களாக திமுகவுக்கு எதிராக வியூகம் வகுத்து செயல்பட்டுக் கொண்டிருந்த மதிமுகவின் பொதுச்செயலர் வைகோவும் இப்போது தாய்வீட்டு நிகழ்ச்சியில் முகம் மலர்ச்சியுடன் மர்ந்திருக்கிறார். 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்னர் வரை அதிமுக கூட்டணியில் இருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், பார்வார்டு பிளாக் கதிரவனும் இன்றைய முரசொலி பவளவிழாவில் மேடையேறியதும் குறிப்பிடத்தக்கது.

மெகா கூட்டணிக்கு அச்சாரம்?
தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு எந்த நேரத்திலும் கவிழலாம்; தேர்தல் எப்போது வேண்டுமானாலும் என்கிற நிலை இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே மேடையில் திமுக ஏற்றியிருப்பது என்பது ஒரு மெகா கூட்டணிக்கான அச்சாரம் என்றே பார்க்கப்படுகிறது.
-
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications