புதிய தமிழகம், கொ.ம.தே.க. உள்ளிட்ட சிறிய கட்சிகளை வளைத்து மெகா கூட்டணி அமைக்க திமுக மும்முரம்
சென்னை: திமுக- காங்கிரஸ் கூட்டணியில் புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல சிறிய கட்சிகளை வளைத்து மெகா கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளும் அதிமுகவை விட திமுகவுக்கான வாக்கு பலம் என்பது 5 முதல் 6 % குறைவு. இதனால்தான் 5 முதல் 6% வாக்குகளை கொண்டிருக்கும் தேமுதிக கூட்டணிக்கு வந்தால் என கணக்குப் போட்டது திமுக.

தேமுதிக அச்சம்
ஆனால் எங்கே திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால், தேர்தலில் வென்ற பின்னர் அதிமுக செய்ததைப் போல எம்.எல்.ஏ.க்களை இழுப்பது, கட்சியை உடைப்பது என்ற நிகழ்வுகள் அரங்கேறிவிடுமோ என்ற அச்சத்தில் தனித்துப் போட்டி; தனி அணியாகப் போட்டி என தீர்மானித்திருக்கிறது தேமுதிக.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இது திமுக தரப்பை அதிர்ச்சி அடையச் செய்தாலும் தற்போது 5 முதல் 6% வாக்குகளை சமன் செய்ய சிறிய கட்சிகளைக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே திமுக அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கிறது.

புதிய தமிழகம், கொ.ம.தே.க.
தென்மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் செல்வாக்கு பெற்ற புதிய தமிழகம், கொங்கு மண்டலத்தில் வாக்குகளை சமன் செய்ய ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றை வளைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் மனித நேய மக்கள் கட்சியில் இருந்து வெளியேறிய தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்க்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கார்த்தி, டி.ராஜேந்தர்
அத்துடன் தேவர் சமூக வாக்குகளை கவர நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, நாடார் சமூகத்தின் பெருந்தலைவர் மக்கள் கட்சி டி. ராஜேந்தரின் லட்சிய திமுக ஆகியவற்றையும் திமுக கூட்டணிக்குள் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications