தஞ்சையில் ஆளுநர் ஆய்வு... கருப்புக் கொடி காட்டி திமுக எதிர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  02-01-18 News Wallet காலை செய்திகள்- வீடியோ

  தஞ்சை: தஞ்சாவூரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித் கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தினார். மாநில உரிமைகளுக்கு எதிரான செயல் என்று கூறிய எதிர்க்கட்சிகள் இவரது ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

  DMK waived black flag for Governor who reviews in Tanjore

  இந்நிலையில் கடலூரில் கழிவறையை ஆய்வு செய்தபோது கீற்று மறைப்பில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ஆளுநர் பார்த்ததாக புகார் எழுந்தது.
  ஆனால் இதை ஆளுநர் மாளிகையும், சம்பந்தப்பட்ட பெண்ணும் மறுத்துள்ளனர். இந்நிலையில் இன்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்கிறார்.

  தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் குழந்தையம்மாள் நகரில் ஆய்வு செய்தார். இதையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுகவினர் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டினர். இதனிடையே ஆளுநர் பொதுமக்களை சந்தித்து குறைகேட்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இதை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TN Governor Banwarilal Purohit goes for review in Tanjore. DMK opposes him to review and waived black flag to him.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற