தென்காசியில் ஒரே ஆச்சரியம்.. போன வாட்டி சப்பாத்தி.. இந்த முறை பரோட்டா.. ஆலங்குளம் கோயிலில் சூப்பர்ல
தென்காசி: தென்காசி ஆலங்குளம் கோயில்தான் இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.. வழக்கத்தை உடைத்து, புதுமைகளை புகுத்தி வரும் கோயில்களில், இந்த ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்றாகும். அப்படி என்ன நடந்தது இந்த கோயிலில்?
வழக்கமாக கோயில்களில் பிரசாதமாக புளியோதரை, சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்படும்.. ஆனால், சமீபகாலமாகவே, பல கோயில்களில், பல்வேறு வகையான உணவுகளை பிரசாதமாக தருகிறார்கள்.

ஆலங்குளம் கோயில்: குறிப்பாக, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருக்கிற பத்ரகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.. இங்கு வருடந்தோறும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கமாகும். இதனால் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானோர் திரண்டு வந்து வழிபடுவார்கள்.. எனவே, இந்த பக்தர்களுக்கு விசேஷமாக பிரசாதங்கள் தரப்படுவதும் நடைமுறையாக உள்ளது..
அந்த வகையில், இந்த வருட திருவிழாவும் நேற்று பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.. இந்த திருவிழாவின் இறுதிநாளன்று பக்தர்களுக்கு பிரசாதமாக புரோட்டா வழங்கப்பட்டிருக்கிறது.
புதுமை பிரசாதம்: இப்படித்தான் கடந்த வருடம், இந்த கோயில் திருவிழாவுக்கு பிரசாதமாக சப்பாத்தி தயார் செய்து வழங்கப்பட்ட நிலையில், அதையே பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது..
கோயில் திருவிழாவில், ஆடுகள், கோழிகள் பலியிட்டு கறிவிருந்து வழங்கப்படுவது காலங்காலமாக இருந்து வரும்நிலையில், கோயில் விழாவில் சப்பாத்தி தந்தது, அதிகளவில் தமிழக மக்களால் பேசப்பட்டது... இப்போது பரோட்டா வழங்கப்பட்டுள்ளதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்றைய தினம், பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் மொத்தம் 10,000 நபர்களுக்கு புரோட்டாவை பிரசாதமாக தந்திருக்கிறார்கள்.
சபாஷ் ஏற்பாடு: இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. ஆலங்குளம் பகுதியில் புரோட்டா ரொம்ப ஸ்பெஷலாம்.. அந்த பகுதி மக்களால் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகவும் பரோட்டா உள்ளது.. அதனால்தான், புரோட்டாவையே பிரசாதமாக கொடுத்தால் உற்சாகமாக நிறைய பேர் திருவிழாவில் பங்கேற்பார்கள் என்பதால், இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டதாக அக்கிராம மக்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications