ஆர்கே நகரில் சுயேட்சைகளாக 4 "தினகரன்கள்" போட்டி

ஆர்கே நகரில் சுயேட்சைகளாக களம் இறங்கும் தினகரன் என்ற பெயரில் 4 பேர் உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே நகரில் சுயேட்சைகளாக போட்டியிடும் வேட்பாளர்களில் டிடிவி தினகரனையும் சேர்த்து மொத்தம் 4 தினகரன்கள் உள்ளனர்.

ஆர்கே நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனினும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததால் அந்த தேர்தலை ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.

Do you know how many Dinakaran's are in the fray?

இந்நிலையில் ஆர்கே நகருக்கு எப்போது இடைத்தேர்தல் என்று கேள்வி எழுந்த நிலையில் இன்றைய தினம் தேர்தல் நடந்தது. மொத்தம் 258 வாக்குச் சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெற்றது.

மொத்தம் களத்தில் 59 பேர் இருந்தனர். இவர்களில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். அந்தந்த வேட்பாளர்களின் சின்னங்களை பொருத்தும் பணிகள் கடந்த வாரம் நடைபெற்றன.

இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் உள்ள டிடிவி தினகரன் பெயரில் அவருடன் சேர்த்து 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் தினகரன் குக்கர் சின்னத்திலும், மற்றொரு தினகரன் ஆட்டோ ரிக்ஷா சின்னத்திலும், மற்றொருவர் டிரில்லிங் மெஷின் சின்னத்திலும், இன்னொரு தினகரன் பெட்டி சின்னத்திலும் போட்டியிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+