அண்ணி அண்ணி.. "விட்ருடா அவளை".. அவ்ளோ சொல்லியும் "பூம் பூம் மாட்டுக்காரர்" கேக்கலியே.. செஞ்சியில்..!
விழுப்புரம்: எவ்வளவுதான் போக்சோவில் ஆபாச நபர்கள் கைதானாலும்கூட, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.. குடும்ப வன்முறை குற்றங்களும் பெருகி கொண்டே இருக்கின்றன..!!
ஒரே குடும்பம் என்றும் பாராமல், சொந்த ரத்த பந்தம் என்றும் பாராமல், குடும்ப உறவுகளின் அருமைகளையும் புரிந்து கொள்ளாமல், சில ஆபாச பேர்வழிகள், எல்லைகளை மீறி கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் கண்ணுக்கு, பச்சிளம் குழந்தையும் ஒன்றுதான், பல்லு போன பாட்டியும் ஒன்றுதான்.. உறவுமுறைகள் எதுவானால் என்ன? வயது வித்தியாசம் எப்படியிருந்தால் என்ன? அது பெண்ணாக மட்டுமே இருந்தால் போதும் என்று நினைக்கும் போதையாளர்களை என்ன செய்வது?

அண்ணிக்கு தொல்லை: எத்தனையோ குடும்பங்களில் அண்ணன் மனைவி அண்ணியை, அம்மாவாக கருதும் மச்சினன்கள், மைத்துனர்கள் உண்டு.. அண்ணி என்பவர் இன்னொரு தாய் என்பதை நம் தமிழ்ச்சமூகம் அன்றிலிருந்து போற்றி வரும் நடைமுறை வழக்கமும்கூட.. நாகரீகம் மாறி வந்தாலும், விஞ்ஞான வளர்ச்சி பெருகி நிறைந்தாலும்கூட, அண்ணிக்குரிய மதிப்பு என்றென்றும் நம் குடும்பங்களில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும், ஒருசிலரின் ஆபத்தான சிந்தனை, அந்த குடும்பத்தையே நாசம் செய்துவிடுகிறது. இது நம் தமிழ்நாட்டிலும் நடப்பது வேதனைதான்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் சத்யா நகரை சேர்ந்தவர் சீனிவாசன்... இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. மாரிமுத்து 35 வயதாகிறது.. வீரமுத்து 32 வயதாகிறது.. இவர்கள் பூம் பூம் மாட்டுக்காரர் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.. இருவருமே திருமணமானவர்களும்கூட..
லாரி டிரைவர் : இதில் வீரமுத்து லாரி டிரைவராக வேலைபார்க்கிறார்.. நேற்றிரவு 9.30 மணிக்கு ஜெயங்கொண்டானில் இருந்து தன்னுடைய வீட்டுக்கு வீரமுத்து நடந்து சென்று கொண்டிருந்தார்.. அப்போது மர்ம நபர், அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் வீரமுத்து அங்கேயே சரிந்து விழுந்தார்.. 9.30 மணி என்பதால், அந்த வழியில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தார்கள்..
இப்படி நடுரோட்டிலேலேயே அரிவாளால் வீரமுத்துவை வெட்டி சாய்ப்பதை பார்த்து அலறி அடித்து ஓடினார்கள்.. இதுகுறித்து, வீரமுத்து மனைவிக்கும், அவரது உறவினர்களுக்கும் தகவல் தந்தனர்.. அவர்கள் போலீசாருக்கு விஷயத்தை சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் விழுந்து கிடந்த வீரமுத்துவை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்... அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்..

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. ஆனால், டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், வீரமுத்து உயிரை காப்பாற்ற முடியவில்லை.. பரிதாபமாக இறந்துவிட்டார். இதையடுத்து, போலீசாரின் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான், வீரமுத்துவின் சபல புத்தி வெளிச்சத்துக்கு வந்தது.. அவரது அண்ணன் மாரிமுத்து மனைவிக்கு, வீரமுத்து அடிக்கடி பாலியல் தொல்லை தந்து வந்தாராம்..
பாலியல் தொல்லை : பலமுறை தன்னுடைய தம்பியை மாரிமுத்து எச்சரித்தாராம்.. அப்போதுகூட, பாலியல் சேட்டைகள் குறையவில்லையாம்.. அதனால்தான், தம்பியை கொல்லும் அளவுக்கு துணிந்தாராம் மாரிமுத்து.. வீரமுத்துவை வீட்டுக்கு வரும்போது வழி மடக்கி சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.. இப்போது வீரமுத்துவின் அண்ணன் மாரிமுத்துவை கைதாகி ஜெயிலில் உள்ளார்.. ஆனால், அவர் தனியாக இந்த செயலில் ஈடுபட்டாரா?, அல்லது வேறு யாருடனும் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications