சின்னமனூரில் மர்மமாய் இறந்து கிடந்த நாய்கள் – பீதியில் மக்கள்
தேனி: சின்னமனூரில் மர்மமான முறையில் நாய்கள் கூட்டமாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள எரசக்கநாயக்கனூர் இந்திரா நகரில் நேற்று காலை பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நாய்கள் இறந்து கிடந்தன.
இதைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் ஏராளமான காகங்களும் இறந்து கிடந்தன.
உயர் ரக நாய்கள்:
தெருநாய்கள் மட்டுமின்றி, ராஜபாளையம், டாபர்மேன், கோம்பை இனத்தை சேர்ந்த உயர்ரக நாய்களும் இறந்து கிடந்தன.
ரசாயனக்கலவை:
இறந்த நாய்களை அதன் உரிமையாளர்கள் தூக்கி பார்த்தபோது அதன் வாயில் ரசாயன கலவை கலந்த கோழி கழிவுகள் இருந்தது தெரிய வந்தது.
விஷம் வைத்து கொலை:
எனவே கோழி இறைச்சி கழிவில் யாரேனும் விஷம் வைத்திருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தெருநாய்கள் அதிகம்:
மேலும் கால்நடைத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது பனிக்காலமாக இருப்பதால் தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்து இருந்தது.
திருட்டுக்காக இருக்குமோ?:
இரவு நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் நாய்களுக்கு இதுபோல விஷம் வைத்து கொன்றனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications