Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் என மக்களை ஏமாற்றுவதா?: அன்புமணி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று பயனளிக்காத வெற்றுத் திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்ற அதிமுக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னையில் 60 வயதைக் கடந்தவர்கள் இலவசமாக பேருந்து பயணம் செய்வதற்கான திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இத்திட்டத்தால் மூத்த குடிமக்களுக்கு பயன் கிடைக்கப் போவதில்லை. வெற்றுத்திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்ற அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.

Don't cheat people: Anbumani Ramadoss slams ADMK govt.

2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஜெயலலிதா வெளியிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்,‘‘58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்''என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. 2011ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பேருந்து கட்டணத்தை 70% அளவுக்கு உயர்த்திய ஜெயலலிதாவுக்கு இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.

இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்ட போதிலும், அதை ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த வெற்று அறிவிப்பை நேற்று வெளியிட்டிருக்கிறார்.

ஜெயலலிதா அறிவித்துள்ள இந்த திட்டத்தால் மூத்த குடிமக்களுக்கு பயன் கிடைக்காது என்பது தான் உண்மை. மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் திட்டம் என்று நாளிதழ்களில் கொட்டை எழுத்தில் செய்தி வரவழைக்கப்பட்டிருக்கும் போதிலும், அது உண்மையல்ல. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மூத்த குடிமகனுக்கும் மாதத்திற்கு 10 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். ஒரு டோக்கனில் ஒரு முறை மட்டுமே பயணம் செய்ய முடியும்.

இதைக் கொண்டு ஒரே பேருந்தில் செல்லக்கூடிய இடங்களுக்கு 5 நாட்கள் மட்டுமே சென்று வர முடியும். இரு பேருந்துகளில் மாறி செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டுமானால், 2 நாட்களுக்கு மட்டுமே இந்த டோக்கன்கள் போதுமானவையாக இருக்கும். உதாரணமாக சென்னை கோடம்பாக்கத்திலிருந்து சைதாப்பேட்டைக்கு 3.9 கி.மீ தொலைவு தான் என்றாலும் நேரடி பேருந்து இல்லை. கோடம்பாக்கத்திலிருந்து வள்ளுவர் கோட்டம் அல்லது தியாகராய நகர் சென்று அங்கிருந்து வேறு பேருந்தில் சைதாப்பேட்டை செல்ல வேண்டும். இதற்கு 2 டோக்கன்களை செலவழிக்க வேண்டும். ஒரேநாளில் இது போன்று இரு இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால் ஒரே நாளில் அனைத்து டோக்கன்களும் காலியாகிவிடும் என்பது தான் உண்மை.

அந்த வகையில் பார்த்தால் மூத்த குடிமக்களுக்கு தமிழக அரசு வழங்கும் 10 டோக்கன்களின் மதிப்பு ரூ.30 முதல் 50 வரை மட்டுமே இருக்கும். இதற்காக 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் போக்குவரத்துக்கழக பணிமனைகளில் நாள் முழுக்க காத்துக்கிடந்து டோக்கன்களை பெற வேண்டும். மொத்தத்தில் இது மூத்த குடிமக்களுக்கு உதவும் திட்டமல்ல.... அவர்களை அலைக்கழிக்கும் திட்டம்.

இந்த திட்டத்தை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்பது தெரிந்தே மக்களை ஏமாற்றும் நோக்குடன் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தவாறு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிபந்தனையின்றி, எத்தனை முறை வேண்டுமானாலும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பயண அட்டை வழங்கப்பட்டிருந்தால் அது ஓரளவுக்காவது பயனுள்ளதாக இருந்திருக்கும்.

அதை விடுத்து மக்களை ஏமாற்றுவதற்காகவே தமது பிறந்த நாள் பரிசாக கருதிக் கொண்டு பயனற்ற திட்டத்தை அறிவித்தால் அதை நம்பி ஏமாறுவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல. தங்களை ஏமாற்றும் ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தேர்தலில் மக்கள் கடுமையான பாடம் புகட்டப்போவது உறுதி.

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பா.ம.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ‘‘சென்னை மாநகர பேருந்துகளில் அனைத்துத் தரப்பினரும் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். 60 வயதான மூத்த குடிமக்கள் தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்'' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் பணிக்காக செல்லும் போது நகரப் பேருந்துகளில் 15 கி.மீ தொலைவு வரை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கும் திட்டமும் உள்ளது. அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பா.ம.க. வெற்றி பெறப்போவதும், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதும் உறுதி. அதற்கு பிந்தைய காலம் மூத்த குடிமக்களுக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் பொற்காலமாக அமையும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+