வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கலுக்கான இ-சேவை மையம்... தமிழகத்தில் துவக்கம்
சென்னை: தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் தொடர்பான இ-சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது. அதனை சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், வருமானவரி சான்று, சாதிச் சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, நிரந்தர இருப்பிட சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் சான்று போன்ற சான்றிதழ்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஆதார் அடையாள அட்டைக்கும் இந்த மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாக்காளர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பெயர் நீக்குதல் போன்ற வாக்காளர் அடையாள அட்டைக்கு தேவையான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் சேவையும், கூடுதலாக நேற்று முதல் இந்த மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கூடுதல் சேவையை சென்னை மைலாப்பூர் தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று காலை தொடங்கி வைத்தார்.
அப்போது, "தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் 600க்கும் மேற்பட்ட அரசு பொது இ-சேவை மையங்களில், இன்று முதல் வாக்காளர் அடையாள அட்டைக்கு பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பெயர்களை நீக்குதல், வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் விட்டு போனவர்கள் மீண்டும் விண்ணப்பித்தல் போன்ற சேவைகளுக்கு உரிய படிவங்களை இந்த மையங்களில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இந்த மையங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக ரசீதுகள் வழங்கப்படும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அதற்கான தீர்வுகள் எட்டப்படும். சேவைக்கு தகுந்தாற்போல், குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

தற்போது வரை புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் இறுதி பட்டியல் 2016 மார்ச் மாதம் வெளியிடப்படும். ஒன்றிற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்களை இந்த இ-சேவை மையங்களில் எல்காட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications