சுந்தர் பிச்சையை வாழ்த்துகிறேன்... அன்புமணி ராமதாஸ்
சென்னை: கூகுள் நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சைக்கு பாமக இளைஞர் அணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
உலகின் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் ஆல்ஃபபெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதன் முதன்மை நிர்வாக அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த சுந்தரராஜன் பிச்சை நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சுந்தரராஜன் பிச்சை சென்னையில் ஒரு மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். இளம்வயதில் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள தொலைக்காட்சி கூட இல்லாத சூழலில் வளர்ந்தவர்.
மேல்படிப்புக்கு அமெரிக்கா செல்ல வேண்டுமென்ற நிலை ஏற்பட்ட போது, அவரது தந்தையின் ஓராண்டு ஊதியத்தை சேர்த்தால் கூட விமானத்திற்கான பயணச்சீட்டு வாங்க முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், அத்தனை தடைகளையும் தமது கல்வி மற்றும் அறிவால் தகர்த்தெறிந்து இந்த உயர் பொறுப்புக்கு வந்திருப்பதன் மூலம் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா ஏற்கனவே வந்துள்ள நிலையில், இன்னுமொரு அமெரிக்க நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பிச்சை தேர்வாகியிருப்பது மிகவும் உற்சாகமளிக்கிறது. தமிழர்களிடம் திறமைக்கு பஞ்சமில்லை... வாய்ப்பும் ஊக்குவிப்பும் மட்டுமே தேவை என்பதை சுந்தரின் உயர்வு நிரூபித்திருக்கிறது.
சுந்தர்ராஜன் பிச்சை மேலும் பல உயர் பதவிகளை பெற்று, சாதனைகளை படைத்து தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் சிறப்பும், பெருமையும் சேர்க்க எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்தியுள்ளார் அன்புமணி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications