உள்ளாட்சி தேர்தல்...பரபரப்பை கிளப்பிய ராமதாஸ் ட்வீட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போட்டுள்ள டிவீட் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை எவ்வளவு லென்த்தாக இழுக்க முடியுமோ, அவ்வளவு லென்த்தாக இழுத்துக் கொண்டிருக்கிறது மாநில தேர்தல் ஆணையம். இல்லாத பொல்லாத காரணத்தையெல்லாம் சென்னை உயர்நீதிமன்றத்தையே டென்ஷனாக்கி வருகிறது.

Dr Ramadoss slams SEC

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளும் தொடர்ந்து அரசை விமர்சித்து வருகின்றன. ஆனால் மாநில தேர்தல் ஆணையம் எதையும் காதில் போட்டுக் கொள்வது போலவே தெரியவில்லை.

இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வாய்ப்பில்லை: மாநில தேர்தல் ஆணையம்- இரட்டை இலை சின்னம் கிடைக்கும் வரை நடக்காது என அறிவித்து விடுங்கள் என்று கூறி நக்கலடித்துள்ளார்.

அதான் சரி!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK founder Dr Ramadoss has slammed SEC for not conducting the local body elections in Tamil Nadu.
Please Wait while comments are loading...