பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக தமிழிசை சவுந்திரராஜனை நியமித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு மத்திய அரசு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் புதிய பதவியை மத்திய அரசு அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை சார்பில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக நியமிப்பதாக கூறியுள்ளது.

 DR Tamilisai Soundarrajan has been appointed as Non official director of BPCL

இந்த புதிய பொறுப்பு அறிவிப்பானை வெளியிடும் நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு தமிழிசை அந்தப் பதவியில் நீடிப்பார் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இன்றைய தேதியிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் தமிழிசை இன்றே அந்தப் பொறுப்பிற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu BJP leader Tamizhisai Soundarrajan has been appointed to BPCL as Non - official diresctor from today to 3 years of time

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற