வாவ் டப்பா வாலா.. ஜிபிஎஸ் மூலம் விவசாயிகளுக்கு உணவு சப்ளை.. மும்பை போராட்டத்தில் சுவாரசியம்!
மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகளுக்கு உணவு வழங்க அங்கு இருக்கும் 'டப்பா வாலா' குழுவினர் வித்தியாசமான முறையை பயன்படுத்தி வருகிறார்கள்.
Recommended Video

மும்பை: மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகளுக்கு உணவு வழங்க அங்கு இருக்கும் 'டப்பா வாலா' குழுவினர் வித்தியாசமான முறையை பயன்படுத்தி வருகிறார்கள்.
6 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி தற்போது மும்பை வரை வந்து இருக்கிறது. இப்போதே 50 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இன்று அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட போகிறார்கள். மெரினா போராட்டம் போல இதிலும் நிறைய சுவாரசியமான இருக்கிறது.

யார் டப்பா வாலாக்கள்
டப்பா வாலாக்கள் மும்பையில் பல வருடமாக உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அலுவலகம் செல்பவர்களுக்கு, வீட்டில் இருந்து கொடுக்கப்படும் மதிய உணவை கொண்டு கொடுப்பதே இவர்கள் பணி. ஒருவரிடம் 1000 மதிய உணவு டப்பாக்களை கொடுத்தால் கூட அவர்கள் சரியாக போய் கொடுத்து விடுவார்கள்.

ஜிபிஎஸ் தொழில்நுட்பம்
இவர்கள் சமீப காலமாக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை உணவு வழங்க பயன்படுத்தி வருகிறார்கள். அதே வசதியை தற்போது இந்த போராட்டத்திலும் அவர்களை கடைப்பிடித்து வருகிறார்கள். நேற்றில் இருந்து அங்கு பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு இவர்கள் உணவு வழங்கி வருகிறார்கள்.

ஏன்
இங்கு இவர்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த காரணம் இருக்கிறது. யாரிடம் அதிக உணவு இருக்கிறதோ, அவர்கள் இவர்கள் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தங்களது இருப்பிடத்தை கூகுள் மேப் கொண்டு அனுப்பிவிடுகிறார். அவர்களுக்கு அருகில் இருக்கும் டப்பா வாலா ஜிபிஎஸ் மூலம் அதை கண்டுபிடித்து சென்று உணவை வாங்கி கொள்கிறார்கள்.

எப்படி வழங்குகிறார்கள்
இதற்காக அவர் பள்ளி கல்லூரி ஹாஸ்டல்கள், ஹோட்டல்கள் , வீடுகள் என எங்கெல்லாம் தெரிந்த ஆட்கள் இருக்கிறார்களோ, அங்கு அதிகமாக சமைக்கப்பட்ட உணவுகளை வாங்குகிறார்கள். பின் அதை சரியாக பேக் செய்து விவசாயிகளுக்கு கொடுக்கிறார்கள். 2000 டப்பா வாலாக்கள் வரை இந்த பணியில் இறங்கி இருக்கிறார்கள்.

அரசியல் அதிசயம்
இதில் அதிசயம் என்ன வென்றால் அரசியல் கட்சிகளும் விவசாயிகளின் உணவு தேவையை தீர்த்து இருக்கிறது. காங்கிரஸ், சிவ சேனா, நவநிர்மாண சேனா ஆகிய கட்சிகள் காலையில் இருந்து உணவு தயாரித்து அனுப்பி இருக்கிறார்கள். அவர்களும் இந்த டப்பா வாலாக்கள் மூலமே அனுப்பி இருக்கிறார்கள்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
Reliance: 6ஆவது ஆண்டாக ஊதியமில்லாமல் வேலை செய்யும் முகேஷ் அம்பானி! ஏன் என்னாச்சு? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications