ஏன் இதை இப்போது பேசுகிறார் ஆளுநர்.. ஏதோ விஷயம் இருக்கு.. துரைமுருகன்
ஆளுநரின் பேச்சில் ஏதோ சூட்சுமம் உள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தேர்தல் நெருங்கும் நேரத்தில் துணை வேந்தர்கள் நியமனம் குறித்து ஆளுநர் ஏன் பேச வேண்டும், இதில் ஏதோ சூட்சுமம் இருப்பதுபோல உள்ளது என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர், கடந்த காலங்களில் துணைவேந்தர் நியமனங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது என்று குற்றஞ்சாட்டியதுடன், தன்னுடைய நியமனத்தில் ஒரே ஒருவரைகூட குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆளுநரின் இந்த பேச்சினை திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். கோட்டூர்புரத்தில் துரைமுருகனை சந்தித்த செய்தியாளர்கள் ஆளுநர் பேச்சு குறித்து கருத்து கேட்டனர். அதற்கு துரைமுருகன், " இரண்டு துணைவேந்தர்களை நியமித்தபோது ஊழல் குறித்து வாயே திறக்காத ஆளுநர், தற்போது திடீரென, துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறார்.
தேர்தல் வரும் சமயத்தில் இப்படி ஆளுநர் கூறுவதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஆளுநர் சொல்வது, விடிவதற்கு முன் சேவல் கூவுவதுபோல் உள்ளது, ஆனால் என்னமோ நடக்கவிருக்கிறது என்பதை ஆளுநர் சூட்சமமாக உணர்த்தியிருக்கிறார்" என்றார்.
[ராஜஸ்தான், ம.பி, சட்டீஸ்கரில் பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்.. 'ஏபிபி' பரபர சர்வே]
இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "வராத மழைக்கு தேர்தலை தள்ளி வைப்பதற்கு பின்னணியில் ஏதோ நடக்கிறது" என்று துரைமுருகன் பதிலளித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?











Click it and Unblock the Notifications