எங்களுக்கு இரட்டை இலை கிடைக்கும்... மதுசூதனன் நாளை வேட்புமனு தாக்கல்- மாஃபா பாண்டியராஜன்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன் நாளை வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மதுசூதனன் நாளை வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு
உடனடியாக பிரச்சாரத்தை தொடங்குவார் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். இரட்டை இலை தங்களுக்கே கிடைக்கும் என்றும் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாக பிளவு பட்டுள்ள அதிமுக சார்பில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் நாளை 23ஆம் தேதி தேதியுடன் முடிவடைகிறது. டி.டி.வி.தினகரன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மதுசூதனன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
வேட்பாளராக போட்டியிடும் மதுசூதனனுக்கு கொலை மிரட்டல் வந்தது உண்மைதான் என்றும் அவர் கூறினார். இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்று நம்புவதாகவும் பாண்டியராஜன் தெரிவித்தார்.
தீபா உடன் இணைந்து பணியாற்றவே கூறிய மாஃபா பாண்டியராஜன், தீபா பேரவையைச் சேர்ந்த ஆயிரகணக்கானோர் இன்று ஒபிஎஸ் தலைமையிலான அணியில் இணைந்துள்ளதாக கூறினார்.
தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் நாளை பொறுப்பேற்றுக்கொண்டு உடனடியாக தங்களின் பணிகளை தொடங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications