Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டி, கொடைக்கானலுக்கு இன்று முதல் இ பாஸ்.. வாகனங்களில் செல்வோர் நோட் பண்ண வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி உள்பட அனைத்து பகுதிகளுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. மாவட்ட எல்லைகளில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இ பாஸ் இல்லாமல் சென்றாலும் உடனே இபாஸ் எடுத்துக் கொண்டுதான் மலையில் பயணிக்க முடியும். அதேநேரம் கொடைக்கானலை பொறுத்தவரை அதிக பட்ச வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. ஊட்டிக்கும் இவ்வளவு வாகனங்கள் தான் செல்ல முடியும் என கட்டுப்பாடுகள் உள்ளன.

தமிழ்நாட்டின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் என்றால் ஊட்டி மற்றும் கொடைக்கானல் தான். கோவைக்கு பக்கத்தில் உள்ள ஊட்டிக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் உண்மையில் ஊட்டியில் 30 ஆயிரம் வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு வசதிகள் இல்லை..

tour ooty kodaikanal

ஊட்டிக்கு அடுத்தபடியாக கொடைக்கானல் மிகப்பெரிய சர்வதேச சுற்றுலா தலமாக இருக்கிறது. இது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு வழக்கமான நாட்களில் 6 ஆயிரம் வாகனங்கள் வரையிலும் வார இறுதியில் 8 ஆயிரம் வாகனங்கள் வரை வருவது வழக்கம். ஆனால் கோடைகால சீசன்களில் 10 ஆயிரம் அல்லது 15 வாகனங்களை தாண்டி வருவது வழக்கம். ஆனால் கொடைக்கானலை பொறுத்தவரை 15 ஆயிரம் வாகனங்களை தாங்கும் அளவிற்கு சாலை கட்டமைப்புகளோ, பார்க்கிங் வசதிகளோ இன்று வரை இல்லை..

கடந்த ஆண்டு வெயிலின் தாக்கம் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி கொடைக்கானலுக்கு படை எடுத்தனர். இதனால் ஊட்டியும், கொடைக்கானலும் ஸ்தம்பித்து போனது. இதையடுத்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி கடந்த ஆண்டு மே 7-ந் தேதி முதல் நீலகிரி மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கபட்டது,

இதன்படி ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது.

அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

ஊட்டி இ-பாஸ் எப்படி

நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உள்பட 14 சோதனைச்சாவடிகளில் இ-பாஸ் சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அங்கு சோதனையும் இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி வர விரும்புபவர்கள் https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரலாம்.

கொடைக்கானல் இ பாஸ் எப்படி

ஊட்டியை போல் கொடைக்கானலிலும் உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது. உள்ளூர் வாகனங்களை தவிர தினமும் 4 ஆயிரம் வாகனங்கள் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட உள்ளன. வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக கொடைக்கானல் நுழைவுவாயிலான தேனி மாவட்டம் காமக்காபட்டி போலீஸ் சோதனைச்சாவடியிலும்(மலை அடிவாரம்), திண்டுக்கல் மாவட்டம் பழனி வழியாக அய்யும்புள்ளி சோதனைச்சாவடி ஆகிய சோதனைச்சாவடிகளில் இன்று முதல் இ-பாஸ் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

கொடைக்கானலில் வாகன நிறுத்துமிடங்கள்

கொடைக்கானலில் பார்க்கிங் வசதி சுத்தமாக கிடையாது. ஏரியை சுற்றியைத்தான் வாகனங்கள் நிறுத்தப்படும். இதனால் வாகன நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதனால் வாகன நெரிசலை தவிர்க்க கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமலுக்கு வந்த உடன். கொடைக்கானல் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறையும். இதுதவிர கொடைக்கானலில் அப்சர்வேட்டரி, ரோஸ் கார்டன், பிரையண்ட் பூங்கா சாலை ஆகிய பகுதிகளில் வாகனம் நிறுத்துமிடங்களும், சில காலி இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் பார்க்கிங் பிரச்சனை குறைந்தால் எளிதாக பயணிகள் சென்றுவர முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+