மதுரையில் ரூ.4 லட்சம், சென்னையில் 400 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்
சென்னை: சென்னையில் 400 கிலோ வெள்ளிப் பொருட்களையும், மதுரையில் ரூ.4 லட்சம் ரொக்கத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலலில் உள்ளன. வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்துள்ளது.

பறக்கும் படையினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் சோதனை நடத்தி வருகிறார்கள். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கம், வேட்டி, சேலை, நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
அவர்கள் இதுவரை கோடிக் கணக்கில் பணம் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் மதுரை சாணாம்பட்டி நான்குவழிச் சாலையில் சென்ற அரசு பேருந்து ஒன்றில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் என சோதனை செய்தனர்.
அப்போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 லட்சம் ரொக்கத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் சென்னை பாரிமுனையில் தனியார் பேருந்து ஒன்றில் அதிக அளவில் வெள்ளிப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட பேருந்தை மடக்கி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 400 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications