For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் போராட்டக் குழு உதயகுமாருக்கு அமலாக்கத்துறை திடீர் சம்மன்

கூடங்குளம் போராட்டக் குழு தலைவர் உதயகுமாருக்கு அமலாக்கத்துறை திடீரென சம்மன் அனுப்பியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் சுப. உதயகுமாருக்கு அமலாக்கத்துறை திடீரென சம்மன் அனுப்பியுள்ளது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து மக்களைத் திரட்டி போராடி வருகிறவர் சுப. உதயகுமார். இவர் பச்சை தமிழகம் கட்சியையும் உருவாக்கியுள்ளார்.

ED issues summon to SP Udayakumar

மத்திய அரசை கடுமையாக உதயகுமார் விமர்சித்த நிலையில் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றன.

இந்நிலையில் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், உதயகுமாரை விசாரணைக்கு வரவழைத்து சம்மன் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயகுமார்,

ED issues summon to SP Udayakumar

மத்திய உள்துறை அமைச்சகத்தாலும், தமிழக சிபிசிஐடி துறையாலும் அக்குவேறு ஆணிவேறாக பரிசோதிக்கப்பட்டிருக்கும் எனது கணக்கு வழக்குகளை தங்களுடைய சென்னை அலுவலகத்துக்குக் கொண்டுவரும்படி அமலாக்கத்துறை பணித்திருக்கிறது. அவர்கள் கேட்டிருக்கும் ஆவணங்களுடன் சென்னை செல்கிறேன் என கூறியுள்ளார்.

English summary
The Enforcement Officials issued a summon to Anti Kundankulam Protest leader SP Udayakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X