நான் நிறைய தடவை மாமியார் வீட்டுக்கு போயிட்டோன்... இனி எடப்பாடிதான் போவார் - தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுநாள்வரைக்கும் யாரை ஸ்லீப்பர் செல்கள் என்று நம்பிக்கொண்டிருந்தாரோ அவர்கள் எல்லாம் ஸ்லிப்பாகி வருவதால் கட்சியில் இருந்து நீக்கி விளையாடி வருகிறார் டிடிவி தினகரன்.

டிடிவி தினகரன் கடந்த சில வாரங்களாக கட்சியில் இருந்து பலரை நீக்கி வருகிறார். சிலரை மட்டும் நீக்காமல் இருந்தார்.

அவர்கள் எல்லாம் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் கூட எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில் சில அமைச்சர்கள் சசிகலாவிற்கு சாதகமாகவே பேசி வந்தனர்.

மாமியார் வீடு

மாமியார் வீடு

சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நான் மாமியார் வீட்டுக்கு பலமுறை போய் வந்திருக்கிறேன் என்று கூறினார். அவர்கள்தான் மாமியார் வீட்டுக்கு செல்லப் போகிறார்கள். நான் ஊழல் செய்யவில்லை. அந்நிய செலவாணி வழக்கு அல்ல என்றும் கூறினார்.

ஊழல்வாதியல்ல

ஊழல்வாதியல்ல

நான் ஊழல் வழக்கிற்காக சிறை சென்றதில்லை. அவர்கள்தான் ஊழல் செய்து விட்டு பயந்து கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் பேச்சிலேயே தெளிவாக தெரிகிறது

உண்ட வீட்டுக்கு ரெண்டகம்

உண்ட வீட்டுக்கு ரெண்டகம்

எடப்பாடி பழனிச்சாமிதான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கிறார். தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்கிறார். விதி வசத்தால் முதல்வராக அமர்த்தப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி.

தப்பிவிட முடியாது

தப்பிவிட முடியாது

என்னை சிறைக்கு அனுப்பிவிட்டால் தப்பித்து விடலாம் என ஆட்சியர்கள் நினைக்கிறார்கள். நான் அமைச்சராக இல்லை. எம்.பியாக இருந்திருக்கிறேன். ஆனால் ஊழல் செய்ததில்லை என்றும் தினகரன் கூறினார். தாவூத் இப்ராஹிமுடன் சேர்ந்து நாங்கள் குண்டு வைத்ததாக கூட அமைச்சர்கள் சொன்னாலும் சொல்வார்கள் என்று கூறிவிட்டு சிரித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்

சிபிஐ விசாரணை பற்றி திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த தினகரன்,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வந்தால் முதலில் திண்டுக்கல் சீனிவாசன்தான் சிறைக்கு போவார்
என்றார். இத்தனை நாட்களாக கொட்டாவி விட்டீர்களா என்று சிபிஐ கேட்கும் என்றும் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran told that press person, Edapadi Palanisamy will go to prison, i am not a corruption man he added.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற