வறட்சி மாநிலம் என அறிவித்த ஆறு மாதங்களில் அந்தர் பல்டி அடித்த அதிமுக அரசு! பின்னணி என்ன?
சென்னை: விவசாயிகள் தற்கொலையை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில் பதிலளித்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் முழுவறட்சி இல்லை என்று கூறியுள்ளது.
அரசே இவ்வாறு கூறியுள்ளதால், விவசாய கடனை ரத்து செய்யுமாறும், வறட்சி நிவாரண நிதியை உயர்த்தி தருமாறும் மத்திய அரசிடம் தமிழக அரசால் இனி வலிமையாக கோரிக்கை வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதை கொச்சைப்படுத்துவதை போல உள்ளது தமிழக அரசு தகவல். மேலும், பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்த காலத்தில், கடந்த ஜனவரியில், தமிழகம் முழுக்கவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியிட்டார்.
வறட்சி பாதிப்பு உள்ளதால், விவசாயிகள் கட்ட வேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தார். மேலும், வறட்சியை சமாளிக்க ஊரக வேலை உறுதி திட்ட நாட்கள் 150ஆக அதிகரிப்பு செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார். பயிர்களுக்கு ஏற்ற வகையில் நிவாரண தொகையை அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்புகளுக்கு நேர் எதிர்மாறாக எடப்பாடி பழனிச்சாமி அரசு சுப்ரீம்கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்துள்ளது. பன்னீர்செல்வம் அறிவித்ததாலேயே இப்படி பல்டி அறிவிப்பை எடப்பாடி அரசு வெளியிட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் அழுத்தம் இதன்பின்னணியில் உள்ளதா என்று மக்கள் கேட்கிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications