ஆட்சியை தக்க வைக்கிறோம்; திமுக வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்ட் போடுறோம்.. எடப்பாடியார் கான்ஃபிடன்ஸ்!
மயிலாடுதுறை: திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். அவர் எப்போதும் உண்மையை பேசுவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். அந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது மயிலாடுதுறையில் தண்ணீர் பிரச்சனையே இருக்காது என்றும் அவர் கூறினார்.
ஒரு விவசாயி மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார்.

திமுக மக்களுக்கு ஏதும் செய்யவில்லை
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பவுன்ராஜை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:- திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. மக்களை பார்க்காமல் குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டனர்.

ஸ்டாலின் பேசுவது பொய்
திமுக வாரிசு அரசியலை காலம், காலமாக மேற்கொண்டு வருகிறது. 20 பேருக்கு வாரிசு அடிப்படையில் திமுக சீட் கொடுத்துள்ளது. இந்த தேர்தலில் வாரிசு அரசியலுக்கு அதிமுக அரசு முற்றுப்புள்ளி வைக்கும். திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். அவர் எப்போதும் உண்மையை பேசுவதில்லை.

தண்ணீர் பிரச்சினை இருக்காது
அதிமுக ஆட்சியில் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். அந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது மயிலாடுதுறையில் தண்ணீர் பிரச்சனையே இருக்காது.

விவசாயி மீண்டும் முதல்வராக வேண்டும்
மூன்று ஆண்டு காலத்தில் தடையில்லா மின்சாரம் கொடுத்துள்ளோம். லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்த அரசு அதிமுக அரசு. ஒரு விவசாயி மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு பூம்புகார் சட்டமன்ற வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.












Click it and Unblock the Notifications